சீனாவில் அடுத்த ஷாக்.. புதிய வகை பறவை காய்ச்சல் ஒருவருக்கு உறுதி.. மனிதர்கள் மத்தியில் பரவுமா?
பெய்ஜிங்: சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 41 வயதாகும் ஒருவருக்கு H10N3 பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் இந்த வகை பறவை காய்ச்சல் மனிதர்கள் மத்தியில் கண்டறியப்படுவது இதுவே முதல்முறையாகும்.
Recommended Video
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் அதி வேகமாகப் பரவியது. காகங்கள் உள்ளிட்ட பல பறவைகள் பறவை காய்ச்சல் காரணமாக உயிரிழந்தன.
இந்த பறவை காய்ச்சல் கோழிப் பண்ணைகளுக்கும் பரவ, வேறு வழியின்றி நூற்றுக் கணக்கான கோழிகளைப் பண்ணை உரிமையாளர்களே அழிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.

சீனாவில் பறவை காய்ச்சல்
இருப்பினும், இந்தப் பறவை காய்ச்சலில் பல வகைகள் மனிதர்களுக்குப் பரவாது என்பது சற்றே நிம்மதி தரும் செய்தியாக அமைந்திருந்தது. இந்நிலையில், சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் 41 வயதான ஒருவர் H10N3 பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த H10N3 பறவை காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவுவது இதுவே முதல்முறையாகும். இந்தத் தகவலைச் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) உறுதி செய்துள்ளது.

H10N3 பறவை காய்ச்சல்
ஜியாங்சு மாகாணத்திலுள்ள ஜென்ஜியாங் பகுதியில் வசிக்கும் இந்த நபருக்கு கடந்த ஏப்ரல் மாத இறுதியில் காய்ச்சல் உள்ளிட்ட சில அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து அவர் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த மே 28ஆம் தேதி அந்த நபர் H10N3 பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

Array
ஆனால் அந்த நபருக்கு இந்த பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்த தகவல்களைச் சீனா வெளியிடவில்லை. இந்த H10N3 பறவை காய்ச்சல் வகை வேகமாகப் பரவாது. ஒப்பீட்டளவில் கடுமையானது பாதிப்புகளை ஏற்படுத்தாது என்பது சற்றே அறுதல் அளிக்கும் ஒரு விஷயமாகும். அந்த நபர் தற்போது சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

சீனா
அந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டனர் என்றும் அவர்களில் யாருக்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் சீனா தெரிவித்துள்ளது. பறவை காய்ச்சலிலும் பல வகைகள் உள்ளன. அவற்றில் சில வகை பறவை காய்ச்சல்கள் சீனாவில் மனிதர்கள் மத்தியில் அவ்வப்போது பரவுவது வழக்கமான ஒரு நிகழ்வுதான். கடந்த 2016-2017 ஆம் ஆண்டுகளில் H7N9 பறவை காய்ச்சல் காரணமாக 300 பேர் கொல்லப்பட்டனர்.

மனிதர்கள் மத்தியில் பரவுமா
ஆனால், இதுவரை H10N3 பறவை காய்ச்சல் பாதிப்பு மனிதர்கள் யாருக்கும் உறுதி செய்யப்பட்டதில்லை. தற்போது இந்த வகை பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இவை மனிதர்களுக்கு இடையே பரவ வாய்ப்பில்லை என்றே சீனா தெரிவித்துள்ளது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications