Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்கா பற்ற வைத்த நெருப்பு... தைவான் கடற்பரப்பை சுற்றி வளைத்து சீனா பிரம்மாண்ட போர் ஒத்திகை!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: அமெரிக்காவின் நான்சி பெலோசி வருகையை தொடர்ந்து தைவான் நாட்டை சுற்றிய கடற்பரப்பில் சீனா பிரம்மாண்ட போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதால் பெரும் பதற்றம் தொடருகிறது.

தைவான் தனி ஒரு நாடாக இயங்கினாலும் சீனாவைப் பொறுத்தவரையில் ஒருங்கிணைந்த நாட்டின் மாகாணமாகவே கருதுகிறது. ஒற்றை சீனா என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளும் உலக நாடுகள், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியே தைவான் என்பதை ஏற்க வேண்டும் என்கிறது.

Chinas largest military exercises around Taiwan

ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள், தைவான் - சீனா விவகாரத்தில் குழப்பமான நிலைப்பாடுகளைத் தான் கடைபிடித்து வருகின்றன. ஒற்றைச் சீனா கோட்பாட்டையும் ஏற்றுக் கொண்டு, தைவான் ஒரு தனிநாடு என்பதையும் ஏற்றுக் கொண்டு நாடுகள் கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. அமெரிக்காவின் பிரதிநிதி நான்சி பெலோசியின் வருகையும் இந்த குழப்பத்தின் வெளிப்பாடாக இருந்தது.

நான்சி பெலோசியின் தைவான் வருகை, சீனாவுடனான போர் பதற்றத்தை கூடுதலாக்கி இருக்கிறது. தைவானை இணைத்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாய நெருக்கடியை சீனாவுக்கு உருவாக்கிவிட்டிருக்கிறது அமெரிக்கா. அதாவது தைவானை சீனா ஆக்கிரமிக்கத் தூண்டி விட்டிருக்கிறது அமெரிக்கா என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அமெரிக்காவின் நான்சி பெலோசி வருகையின் போதே தைவான் வான் பரப்பில் 27 போர் விமானங்களை சரமாரியாக பறக்கவிட்டது சீனா. நெருப்போடு விளையாடுகிறது அமெரிக்கா என பகிரங்கமாக எச்சரித்தது. இப்போது நான்சி பெலோசி, தைவான் பயணத்தை முடித்துவிட்டு கிளம்பிவிட்டார். ஆனால் சீனாவின் உக்கிரம் ஓயவில்லை.

தற்போது தைவானை சுற்றிய கடற்பரப்புகளில் பிரம்மாண்டமான போர் ஒத்திகையை சீனா நடத்தி வருகிறது. சர்வதேசம் பயன்படுத்துகிற நீர்வழிப் பாதைகளில் இந்த போர் ஒத்திகையில் சீனா ஈடுபட்டு வருகிறது. இதனால் பிலிப்பைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் வான்வழிப் போக்குவரத்தை அதிகப்படுத்த வேண்டிய நெருக்கடிக்கு தைவான் தள்ளப்பட்டுள்ளது.

Recommended Video

    China VS Taiwan Military Power 2022 Tamil | சீனா-தைவான் படை பலம் ஒரு ஒப்பீடு | *World

    சீனாவின் இத்தகைய நடவடிக்கைக்கு ஜி7 நாடுகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளன. சீனாவின் இத்தகைய படை குவிப்பால் அப்பிராந்தியத்தில் அமைதி சீர்குலையும் அபாயம் உள்ளது என்கின்றன ஜி7 நாடுகள். ஆனால் எங்கள் இறையாண்மையை மீறியது அமெரிக்காதான் என்கிற குற்றச்சாட்டை விடாமல் முன்வைக்கிறது சீனா. இத்தகைய சூழ்நிலைகளால் தைவான் பிராந்தியத்தில் போர் பதற்றம் தொடருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+