பிரச்னையை தீர்க்கும் திறன் எங்களுக்கு இருக்கு.. 3வது நாடு தலையிட வேண்டாம்.."டிரம்பை" நிராகரித்த சீனா
பெய்ஜிங்: இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையை தீர்க்கும் திறமை எங்கள் இரு நாடுகளுக்கும் உண்டு. எனவே இதில் 3ஆவது நாடு தலையிட்டு சமரசம் செய்யத் தேவையில்லை என சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இது, இரு நாடுகளிடையே நடைபெற்று வரும் பிரச்சினையை மத்தியஸ்தம் செய்ய தயார் என அறிவித்த டிரம்பிற்கு சீனாவின் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.
லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இந்தியா, சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவுடன் போர் தொடுக்கும் எண்ணத்துடன் சீனா, எல்லையில் போர் விமானங்கள், படைகளை குவித்து வருகிறது.
எந்த சூழல் வந்தாலும் சீனாவை எதிர்கொள்ள இந்தியாவும் தயாராக உள்ளது. இதனால் எல்லையில் தொடர்ந்து இரு வாரங்களுக்கு மேலாக பதற்றம் நீடித்து வருகிறது.

தீர்வு
இந்த பதற்றத்தைத் தணிக்க இந்தியா- சீனா இடையே சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று முன் தினம் அறிவித்திருந்தார். இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அனுராக்கிடம் கேட்ட போது பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண நாங்கள் சீனாவுடன் பேசி வருகிறோம் என தெரிவித்தார்.

தீர்க்கும் திறன்
எனவே டிரம்பின் சமரச முயற்சியை இந்தியா நிராகரிக்கிறது என்பது அவரது பதிலில் இருந்து மறைமுகமாக புரிந்து கொள்ள முடிகிறது. டிரம்பின் ஆஃபர் குறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறுகையில் எல்லையில் எந்தவித பிரச்சினையும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகள் மூலம் முறையாக தீர்க்கும் திறன் எங்கள் இரு நாடுகளுக்கும் (இந்தியா- சீனா) உள்ளது.

இந்தியா
சீனாவும் இந்தியாவும் எல்லை தொடர்பான சரியான வழிமுறைகளையும் பேச்சுவார்த்தை குழுக்களையும் கொண்டுள்ளன. இந்தப் பிரச்சினை கட்டுப்படுத்தக் கூடியதே. எனவே மூன்றாவது நாடு தலையிட்டு மத்தியஸ்தம் செய்ய தேவையில்லை என்றார். அது போல் எல்லை பிரச்சினையில் சமரசம் செய்து வைப்பதாக டிரம்ப் கூறியதை அடுத்து அவருடன் பிரதமர் நரேந்திர மோடி போனில் பேசியதாக வந்த தகவலை இந்திய அரசு மறுத்துள்ளது.
Recommended Video

சீனா
இந்த நிலையில் இந்தியா - சீனா பிரச்சினை குறித்து பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியதாகவும் அவர் நல்ல மூடில் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவை ரத்து செய்த போதும் பாகிஸ்தானுடனான பிரச்சினையை தீர்த்து வைக்க டிரம்ப் முன்வந்தார். ஆனால் அதை இந்தியா ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications