அங்க இருந்து பரவியது போய்.. இப்ப மத்த நாட்டுல இருந்து தொத்த ஆரம்பிச்சிருக்காம்.. அலறும் சீனா
பெய்ஜிங்: மற்ற நாடுகளிலிருந்து கொரோனா பரவுவதால் தங்கள் நாட்டு எல்லைகளில் பரிசோதனையை சீனா முடுக்கிவிட்டுள்ளது.
Recommended Video
சீனாவில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி, தற்போது 190-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்தை தாண்டியுள்ளது.
பலியானோர் எண்ணிக்கை 1.83 லட்சமாக உள்ளது. சீனாவில் ஏற்கெனவே வந்த கொரோனாவால் 4,632 பேர் பலியாகிவிட்டனர். பாதிக்கப்பட்ட 82 ஆயிரம் பேரில் 77 ஆயிரம் பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

சிகிச்சை
1000 நோயாளிகள் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் சீனாவில் இரண்டாவது அலை தற்போது வீசிவருகிறது. அங்கு மற்ற நாடுகளிலிருந்து வருவோர் மூலம் கொரோனா பரவுவதாக கூறுகிறார்கள். அது போல் கொரோனா புதிதாக 30 பேருக்கு பரவியதில் அதன் எண்ணிக்கை 1,610 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய சுகாதார ஆணையம்
இவர்களில் சுமார் 23 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். அதாவது வெளிநாட்டு பயண தொடர்பால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா
இதையடுத்து அனைத்து எல்லைப் பகுதிகளிலும் தீவிர பரிசோதனை மற்றும் சிகிச்சையை சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், தொண்டை எரிச்சல், இருமல் ஆகியவை இல்லாமலேயே கொரோனா வைரஸ் ஏற்படுகிறது.

சீனா
91 நில துறைமுகங்கள் (இதன் வழியே வெளிநாட்டினர் சீனாவுக்குள் அனுமதிக்கப்படுவர்) 22 ஆயிரம் கிலோ மீட்டர் நில எல்லையை கொண்டுள்ள நாட்டில் ஏராளமான குறுக்கு வழிகள் உள்ளன. எனவே நில எல்லை மூலம் கொரோனா பரவலை தடுப்பது சீனாவுக்கு சவாலாக அமைந்துள்ளது. அது போல் எல்லைகளில் மருத்துவ வசதிகள் குறைவாகவே உள்ளன. இதனால் அங்கு மருத்துவ உபகரணங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications
