"சீக்ரெட்" ஆப்ரேஷன்! வல்லரசு நாடுகளையும் விடவில்லை.. சீனா போடும் மாஸ்டர் பிளான்.! பகீர் தகவல்
பெய்ஜிங்: உலகெங்கும் சீனாவின் அத்துமீறல் நடவடிக்கை குறித்து மற்றொரு பகார் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனா சமீப ஆண்டுகளாகவே இந்தியா தொடங்கி அண்டை நாடுகளிடம் தொடர்ந்து அத்துமீறியே வருகிறது. அதுமட்டுமின்றி தெற்கு சீன கடலையும் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடி வருகிறது.
தெற்கு சீன கடல் என்பது சர்வதேச வணிகத்திற்கு முக்கியமான ஒன்றாகும். இதன் காரணமாக உலகின் பல நாடுகளும் சீனா மீது கடும் கோபத்தில் உள்ளன.

போலீஸ் ஸ்டேஷன்
இந்தச் சூழலில் சீனா மற்றொரு சட்ட விரோத நடவடிக்கையில் குதித்து உள்ளதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது. உலக வல்லரசாக உருவெடுக்கச் சீனாவும் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகக் கனடா, அயர்லாந்து போன்ற வளர்ந்த நாடுகள் உட்பட உலகெங்கிலும் பல நாடுகளில் சீனா சட்ட விரோதமாக போலீஸ் ஸ்டேஷன்களை ஆரம்பித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது மனித உரிமை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில்
இந்த சட்ட விரோத போலீஸ் நிலையங்கள் அனைத்தும் சீனாவின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் பொது பாதுகாப்பு பணியகத்தின் கீழ் இயங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கனடாவில் பல பகுதிகளில் இதுபோன்ற முறைக்கேடானா போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாகக் கனடாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான டொராண்டோ பகுதியில் மட்டுமே 3 போலீஸ் நிலையங்கள் அமைந்துள்ளன.

எந்த நாடுகள்
சீனாவுக்கு எதிரான கருத்துகளை உடையவர்களைத் தொடர்ந்து கண்காணிக்க ஏதுவாக இந்த போலீஸ் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டு உள்ளன. உக்ரைன், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இப்படி சீன போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்கள் தான் சீனாவில் உள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

எதற்காக
இதுவரை 21 நாடுகளில் சீனா இப்படி போலீஸ் நிலையங்கள் திறந்து உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற சட்ட விரோத போலீஸ் நிலையங்கள் மூலம் அந்த நாடுகளில் நடக்கும் தேர்தல்களையும் மாற்றச் சீனா ரகசியமாக முயன்று வருவதாகும் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் இது பெரிய பிரச்சினை ஆகவும் வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது.

குற்றச்சாட்டு
சீனாவில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. பாதுகாப்பு என்ற பெயரில் நாடு முழுவதும் உரிமை மீறல்கள் அரங்கேறுகிறது. மக்களைத் தடுப்பு முகாம்களில் அடைத்து வைப்பது, குடும்பங்களை வலுக்கட்டாயமாகப் பிரிப்பது மற்றும் கட்டாய கருத்தடை உள்ளிட்ட அத்துமீறல் நடவடிக்கைகளில் சீனா தொடர்ந்து ஈடுபடுவதாகப் புகார்கள் உள்ளன.

விமர்சனம்
இருப்பினும், இதை அடியோடு மறுக்கும் சீனா, இவை தடுப்பு முகாம்கள் இல்லை என்றும் இவை "தொழில் திறன் பயிற்சி மையங்கள்" என்றும் கூறுகிறது. மேலும், பயங்கரத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஒரு பகுதிதான் இது என்றும் இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதைத் தடுக்க அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு பகுதிதான் இது என்றும் விளக்கம் அளிக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications