செக் வைத்த டிரம்ப்.. செக் மேட் செய்த சீனா! இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டீங்க
பெய்ஜிங்: உலக நாடுகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரியை விதித்திருந்தாலும், சீனாவுக்கு விதிக்கப்பட்ட வரிதான் பெரும் பஞ்சாயத்தாகிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் வரிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 7 அரிய வகை தனிமங்களை ஏற்றுமதி செய்வதை சீனா நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.
விண்வெளி தொடங்கி சாதாரண மொபைல் போன் வரையிலும் இந்த தனிமங்களின் பயன்பாடுகள் இருக்கிறது. அப்படி இருக்கையில் சீனாவின் இந்த திடீர் அறிவிப்பு டெக் உலகையே உலுக்கி எடுத்துவிடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சீன பொருட்களுக்கு அமெரிக்கா 54% வரியை விதித்திருக்கிறது. பதிலுக்கு அமெரிக்க பொருட்களுக்கு சீனா 34% வரியை போட்டிருக்கிறது. இந்த வரியை வாபஸ் வாங்கவில்லை எனில் கூடுதலாக 50% என மொத்தம் 104% போடுவோம் பாத்துக்கோங்க என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். இதற்கு பதிலடியாகத்தான் ரேர் எர்த் மெட்டல்கள் எனப்படும் 7 அரிய வகை தனிமங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.
அரிய வகை தனிமங்கள் என்ன சீனாவில் மட்டும்தான் கிடைக்குமா? உலகின் வேறு எந்த பகுதியிலும் கிடைக்காதா? என்று உங்களுக்கு கேட்க தோன்றலாம். விஷயம் என்னவெனில், இந்த தனிமங்கள் பூமியிலிருந்து சுத்தமாக கிடைக்காது. சில கலவைகளோடுதான் கிடைக்கும். இதை நீக்கி சுத்தப்படுத்தி, தூய்மையாக மாற்றுவது பெரிய பிராசஸ். இதற்கான கட்டமைப்புகள் சீனாவிடம்தான் சிறப்பானதாக இருக்கிறது. எனவே உலக நாடுகள் சீனாவைத்தான் நம்பி இருக்கின்றன.
ரேடியோ ஃபிரீக்வென்சி மற்றும் ஸ்டோரேஜ் தொழில்நுட்பங்களில் பயன்படுத்தபடும் சிப்களில் அரிய வகை தனிமங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சீனாவின் இந்த கட்டுப்பாடுகளால் வேறு எந்த நாடுகளை காட்டிலும் அமெரிக்காதான் அதிகம் பாதிக்கப்படும். காரணம் இந்த தனிமங்களை அதிகம் நம்பியிருப்பது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள்தான்.
Broadcom 🇺🇸 அமெரிக்கா (USA)
Qualcomm 🇺🇸 அமெரிக்கா (USA)
TSMC (Taiwan Semiconductor Manufacturing Company) 🇹🇼 தைவான் (Taiwan)
Samsung 🇰🇷 தென் கொரியா (South Korea)
Seagate 🇺🇸 அமெரிக்கா (USA)
Western Digital 🇺🇸 அமெரிக்கா (USA)
இந்த நிறுவனங்கள் பாதிக்கப்பட்டால் அது அமெரிக்க டெக் துறையையே உலுக்கி எடுத்துவிடும். ஆனால் இந்த கட்டுப்பாடுகளை சீனா இன்று திடீரென விதிக்கவில்லை. ஏற்கெனவே இரண்டு கட்ட கட்டுப்பாடுகளை போட்டிருக்கிறது. இது மூன்றாவது கட்டம்.
முதல் கட்டத்தில் - Antimony, Gallium, Germanium
இரண்டாவது கட்டத்தில் - Tungsten, Indium, Molybdenum
மூன்றாவது கட்டத்தில் - Scandium, Dysprosium மற்றும் மற்ற அரிய வகை தனிமங்கள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இப்போது விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி தடை லிஸ்ட்டில் உள்ள Scandium எனும் தனிமம் தொழில்நுட்ப துறையில் மிக முக்கியமானது. இதை வைத்துதான் ScAlN எனும் பைசோஎலெக்ட்ரிக் பொருளை தயாரிக்கின்றனர். அதாவது 5ஜி ஸ்மார்ட்போன், Wi-Fi 6 / Wi-Fi 7 ரவுட்டர்கள், செல்போன் டவர், IoT டிவைஸ்கள் (ஸ்மார்ட் வாட்ச்/ஏசி/டிவி/பிரிட்ஜ்/லைட், சிசிடிவி கேமரா) ஆகியவற்றில் இது பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அமெரிக்காவுக்கு சரியான பதிலடிதான். ஆனால், இது இந்தியாவையும் சேர்த்து பாதிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. பொருத்திருந்து பார்ப்போம். சீனா வைத்தது செக் மேட்-ஆ என.
-
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications