சென்னை டூ கன்னியாகுமரிக்கு அரை மணி நேரம் தான் ஆகும்.. அவ்ளோ ஸ்பீடு! மிரள வைத்த சீனாவின் ரயில்
பீஜிங்: மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய அதிவேக அல்ட்ரா ஹை ஸ்பீடு ரயிலை சீனா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ஹைப்பர்லூப் தொழில் நுட்பத்தில் இயங்கும் இந்த ரயில் பயன்பாட்டிற்கு வந்தால் உலகின் அதிவேக ரயிலாக இதுவே இருக்கும் என்று சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். இதுபற்றிய முழு விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் சீனா பல்வேறு துறைகளிலும் வல்லரசு நாடுகளுக்கு இணையாக அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. ஆசியாவில் சீனாவுடன் போட்டி போடும் ஒரே நாடாக இந்தியா மட்டுமே இருக்கிறது. இருந்தாலும் சீனா தனது புதுப்புது கண்டுபிடிப்புகளால் அமெரிக்காவுக்கே சவால் விடும் வகையில் முன்னேற்றம் கண்டு வருகிறது.

சீனா உலகின் அதிவேக போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய ஹைப்பர் லூப் ரயிலை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. இந்த ஹைப்பர் லூப் ரயிலுக்கான வழித்தடம் உள்ளிட்டவற்றை அமைக்கும் பணியில் சீனா உள்ளது.
கடந்த ஆண்டு டத்தோங் நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் வழித்தடத்தை சீனா உருவாக்கியது. இந்த வழித்தடத்தில் தற்போது அதிவேக ரயிலை சோதித்து பார்த்துள்ளது. இந்த சோதனை வெற்றியும் அடைந்து இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இந்த அதிவேக ஹைப்பர் லூப் ரயில் குழாய் போன்ற வழித்தடம் அமைக்கப்பட்டு அதனுள் மிதந்து செல்லும் வகையிலான தொழில் நுட்பத்தை கொண்டதாகும்.
இதன் மூலம் இந்த ரயிலால் விமானத்துக்கு நிகரான வேகத்தில் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. தற்போது 2 கி.மீ வழித் தடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இந்த ரயில் எதிர்பார்த்த வேகத்தை அடைந்துள்ளதோடு, பிரேக் சிஸ்டம் என அனைத்தும் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடந்துள்ளதாக சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேக்லேவ் என்று சொல்லப்படும் இந்த அதிவேக பறக்கும் ரயில் பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சீன தலைநகர் பீஜிங் மற்றும் ஷாங்காய் இடையே உள்ள 1,200 கி.மீ தூரத்தை 90 நிமிடங்களில் கடக்க முடியும். இன்னும் எளிதாக சொல்வது என்றால் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு இடையேயான 700 கிலோ மீட்டர் தொலைவினை ஏறத்தாழ அரை மணி நேரத்தில் சென்று விட முடியும்.
தற்போது சீனாவில் பயன்பாட்டில் இருக்கும் புல்லெட் ரயில், மணிக்கு 350 கி.மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது ஆகும். பீஜிங்கிலிருந்து - ஷாங்காய்க்கு 4.18 மணி நேரத்தில் புல்லெட் ரயில் செல்கிறது. இந்த ஹை ஸ்பீட் ரயில் பயன்பாட்டிற்கு வந்தால் 1.30 மணி நேரத்தில் சென்றுவிட முடியும் என்று சீன அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த ரயில் சேவையை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு முன்பாக பல கட்ட பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என்பதால் இதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என்றும் சொல்கிறார்கள்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications