அமெரிக்காவுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட கனடா.. சீனா வைத்த செக்! இப்போ இப்படி ஆயிடுச்சே!
பெய்ஜிங்: அமெரிக்கா மாதிரியே, சீனா மீது கனடா வரியை விதிப்பதாக அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா பதில் வரியை போட்டிருக்கிறது. இது வரி யுத்தத்தை தொடங்கி வைத்திருக்கிறது. சீனாவின் செக் காரணமாக அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் கனடா விழிபிதுங்கியுள்ளது.
அமெரிக்க நாடுகளுக்கு வரியை விதிக்கும் முதல் ஆசிய நாடு சீனாதான். இதன் மூலம் ஆசிய நாடுகள் என்றால் என்ன சும்மாவா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

சீனா தரப்பில் நேற்று ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கனடாவிலிருந்து சீனாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் Canola சமையல் எண்ணெய், Canola உணவு பொருட்கள், பச்சை பட்டாணி ஆகியவற்றிற்கு 100% கூடுதல் வரியும், பன்றி இறைச்சி, கடல் உணவு பொருட்களுக்கு 25% கூடுதல் வரியும் விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் 20ம் தேதி முதல் இந்த வரி நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
என்னப்பா இது? அமெரிக்காதான் சீனா மேல வரியை போட்டது. பதிலுக்கு அமெரிக்கா மேலதானே வரி போட்டிருக்கனும்! ஆனால் கனடா கூட எதுக்கு சண்டை? என்று கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு சீன அதிகாரிகள் பதிலளித்திருக்கிறார்கள். அதாவது, அமெரிக்கா வரியை அறிவிப்பதற்கு முன்னரே கனடா முந்திக்கொண்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவிலிருந்து கனடாவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கும், எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் கனடா 100% வரியை அறிவித்தது.
இதற்கு காரணம் அமெரிக்காதான். பைடன் அதிபராக இருக்கும்போதும் சரி, டிரம்ப் அதிபராக வந்தபோதும் சரி.. சீனாவின் பொருட்கள் கனடா மற்றும் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைகிறது. இந்த இரண்டு நாடுகளும் என்ன அமெரிக்காவின் கொல்லைபுற வாசலா? என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.
எனவே எப்படியாவது அமெரிக்காவை சாந்தப்படுத்த வேண்டும் என்று கனடா, சீனாவுக்கு எதிராக வரியை போட்டது. ஆனால் இன்னைக்கு கனடாவுக்கே அமெரிக்கா ஸ்டகெட்ச் போட்டுவிட்டது என்பது தனிக்கதை. ஆக கடனாவுக்கு பதிலடி கொடுக்க சீனா இப்போது களமிறங்கியுள்ளது. சீனாவின் இந்த பதிலடி சற்று காட்டமாகவே இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். காரணம், கடனா-சீனா வர்த்தக உறவு மிகவும் பலம் வாய்ந்தது.
கடந்த ஆண்டு மட்டும் Canola சமையல் எண்ணெய், Canola உணவு பொருட்கள் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சீனாவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. இவ்வளவு பெரிய வியாபாரத்தில் சீனா தற்போது கை வைத்துவிட்டது. இதனால் கனடாவுக்கு சிக்கல்தான். கனடாவின் சீண்டல் காரணமாக சீனா கொடுத்துள்ள பதிலடி காரணமாக இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் தொடங்கியுள்ளது.
-
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications