For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு பக்கம் கொரோனா.. இன்னொரு பக்கம் மோதல்.. சீனர்களை இந்தியாவிலிருந்து விமானம் மூலம் மீட்கும் சீனா!

இந்தியாவில் இருக்கும் சீனர்களை விமானம் மூலம் சீன அரசு மீண்டும் தங்கள் நாட்டிற்கு மீட்டு செல்ல முடிவு செய்துள்ளது.

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்தியாவில் இருக்கும் சீனர்களை விமானம் மூலம் சீன அரசு மீண்டும் தங்கள் நாட்டிற்கு மீட்டு செல்ல முடிவு செய்துள்ளது.

Recommended Video

    India - China இடையே போர் மூளும் அபாயம்? | Oneindia Tamil

    இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. சீனாவில் இருக்கும் நிறுவனங்களை இந்தியா தங்கள் பக்கம் இழுக்க முயன்று வருகிறது. இதை தொடர்ந்து சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் எல்லையில் உரசல் ஏற்பட தொடங்கி உள்ளது.

    சிக்கிம் மற்றும் லடாக் எல்லையில் இரண்டு நாட்டிற்குள் இடையில் உரசல் ஏற்பட தொடங்கி உள்ளது. அதேபோல் நேபாளம் எல்லையிலும் இதனால் மோதல் ஏற்பட்டுள்ளது.

    காப்பான் பாணியில் வெட்டுக்கிளிகள் பயங்கரம்.. நிமிடத்தில் அழியும் பயிர்கள்.. அதிர்ச்சியில் விவசாயிகள்காப்பான் பாணியில் வெட்டுக்கிளிகள் பயங்கரம்.. நிமிடத்தில் அழியும் பயிர்கள்.. அதிர்ச்சியில் விவசாயிகள்

    கொரோனா கேஸ்கள்

    கொரோனா கேஸ்கள்

    அதே சமயம் இன்னொரு பக்கம் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுக்க 1,43,664 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் நாடு முழுக்க கொரோனா காரணமாக 4117 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகார்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சீனாவை விட இந்தியாவில் அதிக கொரோனா கேஸ்கள் உள்ளது.

    மீட்க முடிவு

    மீட்க முடிவு

    இந்தியாவில் இருக்கும் சீனர்களை விமானம் மூலம் சீன அரசு மீண்டும் தங்கள் நாட்டிற்கு மீட்டு செல்ல முடிவு செய்துள்ளது. இதற்கான விவரங்களை சீன அரசு தங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை இணையம் மற்றும் தூதரக பக்கத்தில் இதற்காக விவரம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சீனர்களை மீட்க சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது .

    யாரை மீட்க முடிவு

    யாரை மீட்க முடிவு

    அதன்படி இந்தியாவில் இருக்கும் சீன பயணிகள், பணியாளர்கள், உணவகம் வைத்து இருக்கும் நபர்கள், வியாபாரிகள், மாணவர்கள் ஆகியோர் இந்த விமானம் மூலம் சீனாவிற்கு திரும்பலாம். அவசர தேவை உள்ள யாரும் சீனாவிற்கும் திரும்பலாம். இதற்காக உரிய கட்டணம் செலுத்த வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் டிக்கெட் ஏற்பாடு செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    என்ன விதிமுறை

    என்ன விதிமுறை

    அதோடு இவர்கள் செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை, சுகாதார நடவடிக்கை குறித்தும் சீனா விளக்கி உள்ளது. கொரோனா அறிகுறி இல்லாத நபர்கள் மட்டுமே இப்படி பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் கொரோனா இல்லாத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் சீன அரசு ஏற்பாடு செய்துள்ள தனிமை முகாமில் சில நாட்கள் தங்க ஏற்றுக்கொள்ளும் நபர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    English summary
    China to rescue Chinese nations from India amid growing tension and Coronavirus cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X