அமெரிக்காவின் பேச்சை கேட்டுக்கொண்டு.. எங்களுக்கு எதிராக செயல்படாதீர்கள்! சீனா வார்னிங்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: அமெரிக்காவின் வரி காரணமாக மூன்றாம் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த பாதிப்பிலிருந்து மீள அமெரிக்கா சொல்லும் அனைத்தையும் கேட்க தொடங்கியுள்ளன. இப்படியாக சீனாவுடன் வர்த்தகத்தை குறைக்கும் எண்ணம் இருந்தால் அதை உடனே கைவிட வேண்டும் என்று அந்நாட்டு அரசு மூன்றாம் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

வரி காரணமாக இழப்பை சந்தித்திருக்கும் நாடுகள், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளன.

China US trade

அதாவது அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் எவ்வளவு வரியை விதிக்கின்றதோ, அதே அளவுக்கான வரியை அமெரிக்காவும் மற்ற நாடுகளின் பொருட்கள் மீது விதிக்க தொடங்கியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் வரி யுத்தம் தொடங்கியது. உலகத்தின் மொத்த பொருளாதாரமுமே இதனால் பாதிப்படைய தொடங்கியது. விஷயம் கையை மீறி போவதை உணர்ந்துக்கொண்ட அமெரிக்கா, உடனடியாக 90 நாட்களுக்கு வரியை நிறுத்தி வைப்பதாக கூறியது.

ஆனால் சீனாவுக்கு மட்டும் இது பொருந்தாது என்று டிரம்ப் கூறியுள்ளார். சீன பொருட்களுக்கு 145% வரியும், சில முக்கியமான பொருட்களுக்கு 245 சதவிகிதம் அளவுக்கு வரியும் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த வரி காரணமாக சீனா நெருக்கடியை சந்தித்திருக்கிறது.

மறுபுறம், அமெரிக்காவின் வரி நெருக்கடியை எதிர்கொள்ள மூன்றாம் நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. பேச்சுவார்த்தையில், சீனாவுடன் வர்த்தகம் செய்யாமல் இருந்தால் வரியை குறைப்பதாக அமெரிக்கா கூறியதாக சொல்லப்படுகிறது. இதைத்தான் சீனா கடுமையாக எதிர்த்திருக்கிறது. சீனாவின் வர்த்தக அமைச்சகம் இது பற்றி கூறியதாவது,

"ஒத்து போவது அமைதியை தராது. சமாதானம் பெற முயற்சி செய்வது மரியாதையை தராது. எல்லா நாடுகளும் நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும், சர்வதேச வர்த்தக விதிகளை காப்பாற்ற வேண்டும். அமெரிக்கா உங்களுக்கு அழுத்தம் கொடுத்தாலும் நீங்கள் சீனாவுக்கு எதிராக செயல்படக்கூடாது." என்று எச்சரித்துள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் தங்கள் நாட்டின் தொழில் துறையை விரிவுப்படுத்திவிட முடியும் என்று அமெரிக்கா நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் அது யதார்த்தத்தில் சாத்தியமில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது சீனாவில் இருப்பதை போன்ற தொழில்துறை கட்டமைப்பை அமெரிக்காவில் ஏற்படுத்த சில ஆண்டுகள் டைம் எடுக்கும். அதுவரை அமெரிக்காவால் சமாளிக்க முடியாது. இதுதான் சீனாவுக்கு ப்ளஸ் பாயிண்ட். எனவே வரி விஷயத்தை விட்டு தள்ளி அமெரிக்கா இயல்பு நிலைக்கு இறங்கி வர வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+