தென்சீனா கடல் விவகாரத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம்... ஒபாமாவுக்கு சீனா 'வார்னிங்'
பீஜிங்: தென்சீனா கடல் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்று அந்நாட்டு அதிபர் ஒபாமாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் தென்பகுதியில் உள்ள தென்சீனா கடற்பரப்பு இயற்கை எரிவாயு வளம் கொண்டது. இந்த கடற்பரப்பு முழுவதையும் தமக்கு சொந்தம் கொண்டாடி வருகிறது சீனா.
ஆனால் தென் சீனா கடற்பரப்பில் தங்களுக்கும் உரிமை உண்டு என்பது வியட்நாம், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா நாடுகளின் நிலைப்பாடு. இதை இந்தியா, அமெரிக்காவும் ஆதரித்து வருகிறது.

இதனிடையே தென்சீனா கடற்பரப்பில் 2 செயற்கை தீவுகளை உருவாக்கி அங்கு போர் விமானங்களை நிறுத்துவதற்கான ஓடுபாதையையும் சீனா உருவாக்கியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அண்மையில் அமெரிக்காவின் பிரமாண்ட போர்க்கப்பல் ஒன்றும் போர் விமானங்களும் சீனாவின் இந்த செயற்கை தீவுகள் அருகே முகாமிட்டன.
இதற்கு சீனா கடும் எதிர்ப்பும் எச்சரிக்கையும் விடுத்து வந்தது. இந்நிலையில் ஆசிய- பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அகினோவை அமெரிக்கா அதிபர் ஒபாமா சந்தித்து பேசினார்.
இச்சந்திப்புக்குப் பின்னர், சீனாவின் புதிய கட்டுமானங்கள் அந்த பிராந்தியத்தின் நிலைத்தன்மையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இத்தகைய பதற்றத்தை தணிக்க புதிய கட்டுமானங்கள், ராணுவமயமாக்கலை குறைக்க வேண்டும் என்றும் ஒபாமா கூறினார்.
அதாவது தென்சீனா கடற்பரப்பில் சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை குறிப்பிட்டு இக்கருத்துகளை ஒபாமா தெரிவித்திருந்தார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுதுறை செய்தித் தொடர்பாளர் ஹாங்லி கூறி இருப்பதாவது:
தென்சீனா கடல் பகுதி பிரச்சினையில் தேவையில்லாமல் ஒபாமா தலையிட வேண்டாம். இந்த விவகாரத்தில் விளையாடுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் தலையீட்டால் தென்சீனா கடல் பகுதி நாடுகள் மத்தியில் பதற்றம் உருவாக்கப்படுகிறது. இது தொடரக்கூடாது.
இவ்வாறு ஹாங்லி எச்சரித்துள்ளார்..
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications