கொரோனா ஹாட்ஸ்பாட்டான ஷாங்காய்.. லாக்டவுன் பிறப்பித்த அரசு.. பொருளாதாரத்தை பாதிக்கும் அபாயம்!
பெய்ஜிங்: சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருவதால் அந்த நகரில் லாக்டவுன் அமலான நிலையில் சீனாவின் பொருளாதாரத்திற்கு சரிவை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொரோனா வைரஸ் முதல்முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவியது. இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் சீனாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவியது.
இந்த வைரஸ் அவ்வப்போது உருமாறி அடுத்த அலை உருவாக காரணமாக அமைந்தது. அது போல் ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்சிகிரான், ஓமிக்ரான், ஸ்டீல்த் ஓமிக்ரான் உள்ளிட்ட வேரியண்ட்கள் உருவாகின.

3 அலைகள்
இந்தியாவை பொருத்தமட்டில் கொரோனா 3 அலைகளை சந்தித்து விட்டது. இந்தியாவில் கடைசியாக ஏற்பட்ட ஓமிக்ரானுடன் கொரோனா முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீனாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கத் தொடங்கின. எனவே அங்கு 4ஆவது அலை பரவி வருவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

அதிக மக்கள் தொகை
சீனாவில் அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய நகரமான ஷாங்காயில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் அதிகமாக உள்ளது. இந்த நகரம் சீனாவின் முக்கிய பொருளாதார நகரமாகவும் விளங்குகிறது. இங்கு கேஸ்கள் அதிகரித்துக் கொண்டே வருவதால் லாக்டவுனை அமல்படுத்த சீன அரசு முடிவு செய்துள்ளது.

பொது போக்குவரத்து
லாக்டவுன் பகுதிகளில் பொது போக்குவரத்தையும் நிறுத்துவதாக நகர நிர்வாகம் அறிவித்தது. பொதுச் சேவைகளை வழங்குபவர்கள், உணவு வழங்குபவர்கள் தவிர நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியை நிறுத்தவும் சீன அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் வீட்டிலேயே இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தீம் பார்க் மூடல்
ஷாங்காயில் உள்ள டிஸ்னி தீம் பார்க் உள்ளிட்ட வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. சீனாவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 87 சதவீதம் பேர் உள்ளனர். 52 வயதுக்குள் மேல் உள்ளவர்கள் தடுப்பூசியை போடவில்லை என தெரிகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவிய போது வுகான் நகரில் ஊரடங்கு போடப்பட்டது.

ஷாங்காய் நகர்
அது போல் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. 25 மில்லியன் மக்களை கொண்ட பெருநகரமான ஷாங்காயில் ஊரடங்கால் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது 0.4 சதவீதம் குறையும் வாய்ப்புள்ளது. இந்த ஊரடங்கால் சிறு வர்த்தகங்கள், தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கும்.

3.8 சதவீதம்
சீனாவின் பொருளாதார மையமாக விளங்கும் ஷாங்காய் நகரம் அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8 சதவீதம் கொடுக்கிறது. பெய்ஜிங்கிற்கு அடுத்த மிகப் பெரிய நகரம் ஷாங்காய் ஆகும். எனவே சீன பொருளாதார நிபுணர்களும் அரசும் இந்த பாதிப்பு குறித்து கவலையில் உள்ளார்கள். மேலும் இந்த பாதிப்பை எப்படி சரி செய்வது என்ற யோசனையிலும் உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications