For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹாங்காங்.. தேசிய பாதுகாப்பு சட்டம்.. சீனா மீது பொருளாதாரத் தடை.. எச்சரிக்கும் அமெரிக்கா

Google Oneindia Tamil News

ஹாங்காங்: சீனாவின் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக ஹாங்காங்கில் மீண்டும் கிளர்ச்சி வெடித்துள்ளது. இச்சட்டத்தை அமல்படுத்தினால் சீனா பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது ஹாங்காங். பிரிட்டனிடம் இருந்து 99 ஆண்டுகாலத்துக்கு ஹாங்காங்கை சீனா பெற்றிருந்தது.

பெரும் தவறு.. கொரோனாவால் அடித்துக் கொள்ளும் அமெரிக்கா - சீனா.. தொடங்கியது புதிய சண்டை.. ஏன்? பெரும் தவறு.. கொரோனாவால் அடித்துக் கொள்ளும் அமெரிக்கா - சீனா.. தொடங்கியது புதிய சண்டை.. ஏன்?

ஹாங்காங் போராட்டம்

ஹாங்காங் போராட்டம்

தற்போது இந்த குத்தகை காலம் முடிவடைய உள்ளது. இது தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. அதேநேரத்தில் சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிராக ஜனநாயகத்தை வலியுறுத்தி ஹாங்காங்கில் தொடர் கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 6 மாதங்களாக உக்கிரமாக ஹாங்காங்கில் போராட்டங்கள் நடைபெற்றன.

சீனாவின் சட்டம்

சீனாவின் சட்டம்

இப்போராட்டங்கள் கொரோனா கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து ஓய்ந்திருந்தது. இந்த நிலையில் ஹாங்காங் மக்களின் சுதந்திரத்தை நசுக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா ஏவியிருக்கிறது. இதற்கு எதிராக மீண்டும் ஹாங்காங்கில் கிளர்ச்சிகள் தொடருகின்றன. அடிப்படை ஜனநாயக உரிமையை நிராகரிக்க வகை செய்கிறது சீனாவின் புதிய தேசிய பாதுகாப்பு சட்டம்.

ஹாங்காங் மீண்டும் போராட்டம்

ஹாங்காங் மீண்டும் போராட்டம்

இச்சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதில் சீனா முனைப்புடன் இருக்கிறது. அதேநேரத்தில் ஹாங்காங் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக சர்வதேச சமூகம் திரண்டு நிற்கிறது. உலகின் முதுபெரும் அரசியலாளர்கள் 200 பேர் இச்சட்டத்துக்கு எதிராக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் இது அப்பட்டமான மீறல் நடவடிக்கை என விமர்சித்துள்ளனர். அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோ, ஹாங்காங் சுதந்திரத்துக்கான சாவுமணி என சாடியுள்ளார்.

Recommended Video

    அமெரிக்கா செய்வது பெரும் தவறு.. வெளிப்படையாக குற்றஞ்சாட்டிய சீனா..
    அமெரிக்கா எச்சரிக்கை

    அமெரிக்கா எச்சரிக்கை

    ஹாங்காங் கிளர்ச்சியாளர்களுக்கு அடைக்கலம் நீட்ட ஆதரவுக் கரம் கொடுத்திருக்கிறது தைவான். ஹாங்காங் மக்களுக்கு என்ன உதவிகளையும் செய்ய தைவான் தயாராக இருப்பதாக அதன் அதிபர் டிசாய் இங் வென் கூறியுள்ளார். இதனிடையே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ ப்ரெய்ன், இந்த போக்கு நீடித்தால் சீனா, ஹாங்காங் ஆகியவை அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்திருக்கிறார்.

    English summary
    White House has said that China national security legislation for Hong Kong will lead to US sanctions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X