கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சம் கிடையாது.. திருமணத்தை நிறுத்திய நிச்சயித்த பெண்.. ஷாக்கான இளைஞர்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நிச்சயதார்த்ததற்கு பிறகு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறினார். இதனால் மாப்பிள்ளை வீட்டார் நிச்சயதார்த்தத்தின்போது இளம்பெண்ணின் குடும்பத்துக்கு வழங்கிய ரூ.24.85 லட்சத்தை வழங்கினார். திருமணத்தை இளம்பெண் நிறுத்தியதால் இளைஞர் குடும்பத்தினர் அந்த பணத்தை கேட்டனர். அப்போது தன்னை கட்டிப்பிடித்ததால் ரூ.3.73 லட்சத்தை கழித்து கொண்டு பணத்தை திரும்ப தருவதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தின் பிங்டின்ஷான் எனும் பகுதியை சேர்ந்த இளம்பெண். இவர் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தார். அப்போது புரோக்கர் வான் என்பவர் மூலமாக இளம்பெண்ணுக்கு, அதேபகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிமுகம் ஆனார். இருவரும் கடந்த டிசம்பர் மாதம் சந்தித்தனர். இருவருக்கும் பிடித்துப்போனது.

china-woman-asks-hugging-fee-after-cancelling-her-marriage
Photo Credit:

இதையடுத்து அவர்கள் 2 பேருக்கும் நிச்சயதார்த்தம் வெகுவிமரிசையாக கடந்த ஜனவரி மாதம் நடந்தது. இந்த சமயத்தில் மணப்பெண்ணுக்கு ரூ.24 லட்சத்து 85 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. சீனாவை எடுத்து கொண்டால் திருமணம் செய்யும் ஆண் தனது தரப்பில் இருந்து மணப்பெண் வீட்டுக்கு குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் இளைஞர், ரூ.24.85 லட்சத்தை வழங்கியிருந்தார். அதன்பிறகு அவர்கள் போட்டோசூட் நடத்தினர். இருவருக்கும் டிசம்பர் மாதம் திருமணம் நடத்தப்பட இருந்தது. திருமணத்துக்கு 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் இருவீட்டாரும் திருமண வேலைகளில் தீவிரமாக மேற்கொண்டனர்.

இந்நிலையில் தான் அந்த இளம்பெண் திடீரென்று திருமணத்தை நிறுத்தி உள்ளார். அதாவது தனது கணவர் குறைவாக சம்பாதிக்கிறார். இதனால் திருமணத்தில் விருப்பம் இல்லை. திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறினார். இளைஞர் குடும்பத்தினர், இளம்பெண்ணிடம் பேசினர். திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளும்படி கெஞ்சினர். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து இளைஞர் சார்பில் வழங்கப்பட்ட ரூ.24.85 லட்சத்தை திரும்ப வழங்கும்படி கேட்டனர். அதற்கு இளம்பெண் ஒப்புக்கொண்டார். அதாவது தன்னை கட்டிப்பிடித்ததற்கு 30 ஆயிரம் யுவான் (இந்திய மதிப்பில் ரூ.3,73,070) கட்டணமாக வேண்டும். இதனால் ரூ.2.73 லட்சத்தை எடுத்து கொண்டு மீதமுள்ள பணத்தை தருவதாக கூறினார்.

ஆனால் இளைஞர் குடும்பத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை. இளைஞர் விருப்பப்பட்டு கட்டிப்பிடிக்கவில்லை. போட்டோஷூட்டின்போது போட்டோகிராபர் கேட்டு கொண்டதால் கட்டிப்பிடித்தார். இதனால் முழு பணத்தை தர வேண்டும் என்று கூறினர். இதையடுத்து இறுதியாக இளம்பெண்ணின் குடும்பத்தினர் முழு பணத்தையும் வழங்க ஒப்புக்கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+