எஸ்கலேட்டரில் சிக்கி நசுங்கி இறந்த பெண்... சீனாவில் சோகம்: அதிர்ச்சி வீடியோ
பெய்ஜிங்: சீனா ஷாப்பிங் மாலில் நகரும் படிக்கட்டில், தமது குழந்தையுடன் வந்த பெண் ஒருவர், எந்திரத்தில் ஏற்பட்ட துளையில் சிக்கி, உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹூபேய் மாகாணத்தின், ஜிங்ஷுவ் நகரில் 30 வயது இளம்பெண் ஒருவர், தனது கைக்குழந்தையுடன் பொருட்கள் வாங்கிச் செல்ல அப்பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலிற்கு வந்துள்ளார்.
அப்போது, கீழ் தளத்திலிருந்து, மேல் தளத்திற்காக செல்வதற்காக, குழந்தையுடன் நகரும் மின் ஏணி மூலம் ஏறிச் சென்றுள்ளார். மேல்தளத்தை அடைந்தபோது, அதிலிருந்து இறங்க முயற்சி செய்தபோது, நகரும் படிக்கட்டு எந்திரத்தின் முகப்பு பகுதி, திடீரென உடைந்து விழுந்தது.
உடனே அந்த பெண் தனது குழந்தையை மேலே தள்ளிவிட்டார். இதைப் பார்த்தவர்கள் குழந்தையை உடனடியாக பிடித்தனர். ஆனால், அந்த இளம்பெண், அந்த நகரும் படிக்கட்டிற்குள் சிக்கி உள்ளே விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற முயற்சியும் பலனளிக்கவில்லை.
இதில் அந்த பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதனையடுத்து அந்த பெண்ணின் உடல் எஸ்கலேட்டர் எந்திரத்தின் உள் பகுதியில் இருந்து மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தின் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications