காபி, முட்டை வாங்கித் தராததால்.. ஊழியரின் வேலையைக் காலி செய்த சூப்பர்வைசர்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வேலை செய்து வந்த நிறுவனத்தில் தனது சூப்பர்வைசருக்கு காலை சாப்பாடு வாங்கித் தராததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பொதுவாக அலுவலகம் என்றாலே அங்கு நடக்கும் அரசியல்களுக்குப் பஞ்சம் இருக்காது. அதுவும் பெண் என்றால் அரசியலுடன் கூடுதலாக பல்வேறு பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும். அந்த வகையில், சீனாவில் தனது மேற்பார்வையாளருக்கு காலை உணவு வாங்கித் தராததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

சீனாவின் சாங்காய் நகரைச் சேர்ந்தவர் லூ. இவர் ஒரு கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். அதே நிறுவனத்தில் சூப்பர்வைசராக இருப்பவர் லியூ. இவருக்கு தினம்தோறும் காலை உணவாக ஒரு அமெரிக்கானோ காபி மற்றும் முட்டையும் வாங்கி வந்து தர வேண்டும் என்று லூவுக்கு லியூ கட்டளை இட்டுள்ளார். மேலும், அவர் சாப்பிடும்போது லூ தண்ணீரும் வைத்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மிகவும் மனச் சோர்வடைந்த லூ, ஒரு கட்டத்தில் இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் லியூவின் இந்த நடவடிக்கைகள் குறித்துப் பேசியுள்ளார். இதையடுத்து, அந்த நிறுவனத்தின் மனிதவளப் பிரிவினர் லூவை வேலையைவிட்டே தூக்கியுள்ளனர். அதுவும் எந்தவொரு இழப்பீடும் வழங்கப்படாமல் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நினைத்த லூவுக்கு கடைசியில் வேலை போனது தான் மிச்சம். இதனால், மிகவும் சோகமடைந்த லூ தனக்கு நடந்த அநீதிகள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளானது. ஒருகட்டத்தில் அனைத்து தரப்பினரது மத்தியிலும் நிறுவனத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, நிறுனவத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படவே லூ மீண்டும் அந்த நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார். அதுமட்டுமல்லாமல் தனது அதிகாரத்தையும், பொறுப்பையும் தவறாகப் பயன்படுத்தியதற்காகவும், தனது சொந்த விஷயங்களுக்கு ஊழியர்கள் மற்றும் துணை அதிகாரிகளை நிர்பந்தித்ததற்காக லியூவை பணியில் இருந்து நீக்கம் செய்து அறிவித்தது அந்த நிறுவனம்.
சீனாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பின்படி 64 சதவீதம் பேர் வேலை செய்யும் நிறுவனங்களில் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலான வேலைப் பளு, கெட்ட வார்த்தைகள், பாலியல் தொல்லைகள் போன்ற பல்வேறு பிரச்னைகளால் வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.
மேலும், 6 சதவீதத்தினர் மட்டுமே தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து வெளியில் பேசியுள்ளனர். தேவையில்லாத வேலைகள் கொடுக்கப்படும்போது அதனைத் தவிர்ப்பதற்கான உரிமை ஊழியர்களுக்கு உள்ளது என்று சட்ட வல்லுநர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும்போது அதற்கான ஆதாரங்களாக ஸ்கிரீன் ஷாட்ஸ், ரெக்கார்டிங்ஸ் போன்ற அனைத்தையும் ஊழியர்கள் சேமித்து வைக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
லூவுக்கு நேர்ந்த கொடுமை தற்போது உலக அளவில் பேசு பொருளாகியுள்ளது. இதனால், சீனாவில் வேலை செய்யும் இடங்களில் ஊழியர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், கொடுமைகள் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications