புலியை அடித்துச் சாப்பிட்ட சீனத்து "புலிப்பாண்டி" கைது... 13 வருடம் சிறைத் தண்டனை
பெய்ஜிங்: தனது பண பலத்தைக் காட்ட புலியைக் கொன்று அதன் கறியை நண்பர்களுக்கு விருந்தளித்த சீன வியாபாரிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சீனாவை சேர்ந்த வியாபாரி ஸு. பெரும் பணக்காரரான இவர் தனது நண்பர்களுக்கு அவ்வப்போது விருந்தளித்துள்ளார். அப்போது தனது பணபலத்தைக் காட்ட புலிக்கறியை உணவாக பரிமாறியுள்ளார். மேலும், தனது ஆண்மையைப் பெருக்க புலியின் ரத்தத்தை ஸூ மதுவாக குடித்து மகிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2013ம் ஆண்டு மட்டும் ஸு 3 புலிகளை கொன்று சமைத்துச் சாப்பிட்டுள்ளார். இதற்கென சமூகவிரோத கும்பல் ஒன்றிடம் இருந்து சட்டவிரோதமாக திருடப்பட்ட புலிகளைப் பெற்றுள்ளார் ஸு.

புலி ஒன்றை மின்சாரம் பாய்ச்சிக் கொன்ற ஸு அதன் இறைச்சியை வெட்டிக் கூறு போடும் வீடியோ ஒன்று போலீசாரிடம் கிடைத்தது. அதன் அடிப்படையில் கைது செய்த போலீசார், இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் தனது குற்றத்தை ஸு ஒப்புக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஸு உள்பட 15 பேர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு ஸுக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், அவருக்கு ரூ.15 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இவருக்கு உடந்தையாக இருந்த 14 பேருக்கு ஐந்து முதல் ஆறரை ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஸு வீட்டில் போலீஸார் சோதனையிட்டபோது புலிக் கறி மட்டுமல்லாமல் ராஜநாகம் உள்ளிட்ட பல அரிய விலங்குகளையும் கூட அவர் சாப்பிட்டு வந்தது தெரிய வந்ததாம்.
புலிக்கறி சாப்பிடுவது என்பது உலக அளவில் மிகவும் அரியதாக பார்க்கப்படுகிறது. மேலும் புலிக்கறி கிடைப்பதும் குதிரைக் கொம்பானதாகும். அதிக செலவு பிடி்க்கும் விஷயமும் கூட. ஆனாலும் தனது பண பலத்தால் புலிக்கறியையும் சாப்பிட்டு விருந்தும் வைத்துள்ளார் இந்த ஸு. சீனாவில் சில பெரும் பணக்காரர்கள் புலிக்கறி சாப்பிடுவதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் மொத்தமே 3200 புலிகள்தான் இருப்பதாக உலக வைல்ட்லைப் நிதியம் கணக்கு கூறுகிறது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவில்தான் உள்ளன. இதுதவிர தாய்லாந்து, வட கிழக்கு சீனாவிலும் புலிகள் கணிசமாக உள்ளன. கடந்த நூற்றாண்டில் 97 சதவீதம் புலிகள், வேட்டை காரணமாக கொல்லப்பட்டு விட்டன. மேலும் வசிப்பிட இழப்பு காரணமாகவும் பல புலிகள் இடம் பெயர்ந்து உயிரிழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications