டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்க 4 மாதக் குழந்தையை விற்ற தந்தைக்கு 5 ஆண்டுச் சிறை
பீஜிங்: சீனாவில் டி.வி. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாடகராகும் ஆசையில் தனது 4 மாத குழந்தையை விற்ற தந்தைக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் குய்சோவ் மாகாணத்தை சேர்ந்தவர் சொவ். பாடுவதில் ஆர்வம் மிக்க இவருக்கு 4 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், அவரது மனைவி தனது குழந்தையை காணவில்லை என்றும் அதனை கண்டுபிடித்து தருமாறும் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
அவரது புகார் தொடர்பாக போலீசார் நடத்திய விசாராணையில் அவரது கணவரான சொவ், தனது குழந்தையை விற்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து சொவ் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், டி.வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பாடகராகும் ஆசையில் தனது குழந்தையை விற்றதை அவர் ஒத்துக் கொண்டார். குழந்தையை விற்றப் பணமான 1650 அமெரிக்க டாலரை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பக் கட்டணமாக கட்டியதாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இது இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து இரண்டாயிரத்து ஐநூற்று நாற்பத்தேழு ரூபாய் ஆகும்.
அதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிமன்றம் குழந்தைகள் கடத்தல் குற்றத்திற்காக சொவ்-விற்கு 5 வருடம் சிறை தண்டனை விதித்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications