Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாலத்தீவில் சீனா உளவு கப்பல்.. பதிலடியாக இலங்கைக்கு அதிநவீன நீர்மூழ்கி கப்பலை அனுப்பிய இந்தியா!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: மாலத்தீவுக்கு சீனாவின் உளவு கப்பல் Xiang Yang Hong3 சென்ற நிலையில் இந்தியாவின் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலான INS Karanj கொழும்பில் முகாமிட்டுள்ளது.

இந்தியாவை உளவு பார்ப்பதற்காக இலங்கைக்கு சீனா 'ஆராய்ச்சி கப்பல்களை' அனுப்புவதாக அறிவிக்கும். இலங்கை அரசும் சீனாவின் இத்தகைய உளவு கப்பல்களுக்கு இந்தியாவின் எதிர்ப்பை மீறி அனுமதி தந்து வருகிறது.

 Chinese spy ship in Maldives- India sends submarine to Sri Lanka

இலங்கையைத் தொடர்ந்து மாலத்தீவும் இந்தியாவுக்கு எதிராக திரும்பி இருக்கிறது. மாலத்தீவின் புதிய அதிபரான முய்சு, இந்தியா எதிர்ப்பு நிலையை தீவிரமாக கடைபிடித்து வருகிறார். மாலத்தீவில் முகாமிட்டுள்ள இந்திய ராணுவம் வெளியேற மார்ச் 15-ந் தேதி வரை ஏற்கனவே கெடுவும் விதித்துள்ளார் அதிபர் முய்சு.

இந்நிலையில் அண்மையில் சீனாவின் உளவு கப்பலான Xiang Yang Hong3 மாலத்தீவின் மாலே துறைமுகத்துக்கு சென்றடைந்தது. மாலேவில் இருந்து இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவே இந்த அதிநவீன Xiang Yang Hong3 உளவு கப்பலை சீனா அனுப்பி வைத்தது.

இதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியாவும் தமது அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலான INS Karanj -ஐ இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு அனுப்பி வைத்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை சனிக்கிழமை சென்றடைந்த இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இன்று வரை அங்கு முகாமிட்டிருக்கும்.

கொழும்பு துறைமுகத்தில் முகாமிட்டுள்ள இந்திய நீர்மூழ்கிக் கப்பலை இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் INS Karanj நீர்மூழ்கிக் கப்பலில் இலங்கை கடற்படையினர் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். இலங்கை சென்றுள்ள இந்திய கடற்படையினர் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளையும் பார்வையிட திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக இலங்கைக்கான இந்திய தூதரக வெளியிட்ட செய்திக் குறிப்பில், கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பலுக்கு நேற்று விஜயம் செய்த உயர் ஸ்தானிகர் மாலுமிகளுடன் கலந்துரையாடினார். கற்றல் அனுபவத்திற்காக 100 @srilanka_navy வீரர்கள் இக்கப்பலுக்கு விஜயம் செய்திருந்தனர். செயற்பாட்டு நடவடிக்கைகள் நிமித்தம் முதல் வெளிநாட்டு துறைமுக விஜயமாக கொழும்பை சென்றடைந்த ஐ.என்.எஸ் கரஞ் @srilanka_navy ஆல் வரவேற்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+