ஏகப்பட்ட பச்சை மீனைச் சாப்பிட்ட சீனாக்காரர்.. வயிறு முழுக்க நாடாப் புழுக்கள் குவியல்!
பீஜிங்: அளவுக்கதிகமாக பச்சையாக மீனை சாப்பிட்ட சீன நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வயிறு முழுவதும் நாடா புழு உண்டாகி உடல் அரிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.
சீனாவின் விருப்ப உணவுகளில் ஒன்றாக உள்ளது சமைக்காத பச்சை மீன். அதன்படி, பச்சை மீன் பிரியரான நபர் ஒருவர், சமீபத்தில் கடும் வயிற்று வலியால் அவதிக்குள்ளாகியுள்ளார். நாளடைவில் வயிற்று வலியோடு உடல் அரிப்பும் சேர்ந்து கொள்ள, சிகிச்சைக்கென குவாங்சோவில் உள்ள மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், வயிற்றுப் பகுதி முழுவதும் நாடாப் புழு நெளிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக நோயாளியிடம் மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையில், அவர் அளவுக்கதிகமாக பச்சை மீனைச் சாப்பிட்டது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது நாடாப் புழுவை அழிப்பதற்கான சிகிச்சையை அந்நோயாளி பெற்று வருகிறார்.
விலையுயர்ந்த உணவுகளில் ஒன்றான பச்சை மீனால், ஒட்டுண்ணி நோய் ஏற்பட்டு உயிரிழக்க நேரிடும் என்று அந்நாட்டு மருத்துவர்கள் எச்சரித்த போதிலும் தொடர்ந்து சீனர்கள் இந்த உணவை உண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications