தைவான் வான்பரப்பில் அத்துமீறி பறந்த சீனா போர் விமானங்கள்-எச்சரிக்கையுடன் 4 யு.எஸ். போர்க்கப்பல்கள்!
தைபே: தைவான் நீரிணைப் பகுதியில் சீனாவின் போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததால் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் பிரதிநிதி நான்சி பெலோசி, தைவானுக்கு வருகை தர எதிர்ப்பு தெரிவித்து இத்தகைய அத்துமீறல்களை சீனா மேற்கொண்டு வருகிறது.
2-வது உலக மகா யுத்தத்துக்குப் பின்னர் சீனாவில் பயங்கர உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதில் மா சேதுங் தலைமையிலான கம்யூனிசப் படைகள் வெற்றி பெற்றது. சீனாவில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த குவாண்டமிங் எனப்படும் தேசியவாத அரசு தோல்வியைத் தழுவியது. இதனால் சீனாவை விட்டு வெளியேறி தைவான் நிலப் பரப்பில் சீனா குடியரசு ஆட்சியை அமைத்தனர்.

தனிநாடு தைவான்
தைவான், தனித்த இறையாண்மை கொண்ட ஒரு நாடாக அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால் சீனாவோ, தைவானும் எங்கள் நாட்டின் ஒரு பகுதி; எப்போது வேண்டுமானாலும் சீனாவின் ஒரு மாகாணமாக தைவானை இணைப்போம் என்கிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தைவான் மீது ஆக்கிரமிப்பு முயற்சி?
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்கிய நாள் முதலே, தைவான் மீதும் சீனா ஆக்கிரமிப்புப் போர் நடத்தும் என்றே கூறப்பட்டு வந்தது. சீனாவும் தைவானை அச்சுறுத்தும் வகையில் போர் விமானங்களை பறக்க விடுதல்; தைவான் அருகே போர் ஒத்திகையில் ஈடுபடுதல் என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்க்கின்றன.

நான்சி வருகைக்கு எதிர்ப்பு
இந்நிலையில் அமெரிக்காவின் பிரதிநிதி நான்சி பெலோசி, தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக அறிவித்தார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் தைவான் வான்பரப்பில் இன்று சீனாவின் போர் விமானங்கள் இடைவிடாமல் பறந்தன. நான்சி பெலோசியின் வருகைக்கு எதிராகவே சீனாவின் போர் விமானங்கள் பறந்ததாக கூறப்படுகிறது.
Recommended Video

அமெரிக்கா போர்க் கப்பல்கள்
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக, தைவானின் கிழக்குப் பகுதி கடற்பரப்பில் 4 அமெரிக்கா போர்க்கப்பல்கள் ரோந்து வந்தன. போர் விமானங்களை தாங்கிய இந்த போர்க்கப்பல்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன என்கின்றன அமெரிக்க தரப்பு வட்டாரங்கள். தைவானை முன்வைத்து சீனாவும் அமெரிக்காவும் ராணுவ பலத்தை காட்ட முயற்சிப்பதால் அப்பிராந்தியத்தில் பதற்றம் தொடருகிறது.
-
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
நள்ளிரவில் பாய்ந்த அமெரிக்க ஏவுகணைகள்... அதிகாலையில் திருப்பி அடித்த ஈரான்! மீண்டும் வெடிக்கும் போர் -
ஜப்பானுக்கு தண்ணி காட்டும் சீனா.. இருந்தது ஒன்னே ஒன்னு அப்போ அதுவும் போச்சா!! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications