For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேவு பார்க்க புது ஏஜெண்ட் வந்தாச்சு.. சிஐஏவில் பணிக்கு அமர்த்தப்படும் ரோபோக்கள்!

அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவில் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவில் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளது. தானாக செயற்கையாக சிந்திக்கும் திறன் கொண்ட, கம்ப்யூட்டர் சாப்ட்வேர்தான் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும்.

இதை செயற்கை நுண்ணறிவு என்று தமிழில் சொல்வார்கள். எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவை ராணுவத்தில் சேர்க்க, வசீகரன் முயற்சிப்பாரே அதேபோல்தான் தற்போது அமெரிக்கா உண்மையாக அவர்கள் உளவு அமைப்பில் ரோபோக்களை பணியமர்த்த உள்ளது.

ஏற்கனவே சிங்கப்பூர் முக்கியமான சில பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க ரோபோக்களை பணிக்கு அமர்த்தி இருக்கிறது. அதை அமெரிக்கா வேற லெவல் திட்டமாக விரிவுபடுத்த இருக்கிறது.

இதுவரை எப்படி செய்து வந்தார்கள்

இதுவரை எப்படி செய்து வந்தார்கள்

இதுவரை அமெரிக்காவில் சிஐஏ நடத்தும் கண்காணிப்பு பணிகளில் மனிதர்களே வேலைக்கு அமர்த்தப்பட்டு வந்தார்கள். தினமும் நடக்கும் விஷயங்களின் வீடியோக்களை ஆராய்வது தொடங்கி குற்றவாளிகள் இருக்கும் வீடியோக்களை, சாலையில் இருக்கும் சிசிடிவி கேமராக்களை எல்லாவற்றையும் நல்ல அனுபவமிக்க, பயிற்சி அளிக்கப்பட்ட நபர்களே சோதனை செய்து வந்தார்கள்.

என்ன செய்வார்கள்

என்ன செய்வார்கள்

தற்போது இவர்களின் வேலையை ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் செய்ய இருக்கிறது. ஆம் இந்த தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் ரோபோக்கள்தான் இனி இந்த சிறிய ரக உளவு வேலைகளை பார்க்கும். வேறு நாட்டிற்கு சென்று, அங்கு மறைந்து வாழ்ந்து செய்யப்படும் கஷ்டமான உளவு வேலைகளை மட்டுமே இனி மனிதர்கள் செய்வார்கள் என்று சிஐஏ அமைப்பின் அறிவியல் குழு துணை இயக்குனர் டான் மேவ்ரிக்ஸ் கூறியுள்ளார்.

பயிற்சி அளிப்பார்கள்

பயிற்சி அளிப்பார்கள்

இந்த ரோபோக்களை உருவாக்கும் பணியில் தற்போது சிஐஏ களமிறங்கி இருக்கிறது. பென்டகன் உதவியுடன் இன்னும் சில மாதங்களில் இது பயன்பாட்டிற்கு வரும். பின் அந்த ரோபோட்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி அளித்து இந்த வருட இறுதிக்குள் பணிக்கு அமர்த்துவார்கள். மனிதர்களின் முகங்களை இந்த ரோபோட்கள், மனிதர்களை விட வேகமாக சோதனை செய்து முடிவுகளை ஆராய முடியும் என்று சிஐஏ கூறியுள்ளது.

என்ன மாதிரியான விஷயங்களுக்கு உதவும்

என்ன மாதிரியான விஷயங்களுக்கு உதவும்

இந்த ரோபோக்களை ராணுவ தளவாடங்களிலும் பணிக்கு அமர்த்த இருக்கிறார்கள். இது வேவு பார்க்கும் வேலையை அப்படியே தலைகீழாக செய்து, யாராவது வானத்தில் இருந்து, ஆளில்லா ட்ரோன் வகை கேமராக்களில் வேவு பார்க்கிறார்களா என்று கண்டுபிடிக்கும். இதை உருவாக்கும் பணியிலும் சிஐஏ இறங்கியுள்ளது. இது அவர்களின் பாதுகாப்பு துறையை மிகவும் வலுப்படுத்தும்.

English summary
CIA plans to use Artificial Intelligence Robots as the new spy. By this year-end, they are planning to create these robots for important spy works.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X