ஈரானில் விழுந்த அமெரிக்க விமானி! இதய துடிப்பை வைத்து பிடித்த US.. CIAன் 'கோஸ்ட் மெர்மெர்' வேட்டை
டெஹ்ரான்: ஈரானின் மலைப்பகுதிகளில் மாயமான அமெரிக்க விமானியை அமெரிக்க தேடி வந்தது. இவரை கண்டிபிடிக்க உலகில் இதுவரை இல்லாத புதிய தொழில்நுட்பம் ஒன்றை அமெரிக்கா கையில் எடுத்துள்ளது. இத்தனை காலம் சிஐஏ ரகசியமாக காத்து வைத்திருந்த அஸ்திரம் இது என்று கூறப்படுகிறது.
ஈரானின் கரடுமுரடான மலைப்பகுதிகளில் மாயமான அமெரிக்க விமானியை, மைல் கணக்கிற்கு அப்பால் இருந்தே அவரது இதயத் துடிப்பை வைத்து சிஐஏ கண்டுபிடித்துள்ளது. இந்த அதிரடி மீட்புப் படலத்தின் பின்னணியில் 'கோஸ்ட் மெர்மெர்' (Ghost Murmur) என்ற அதிநவீன மாயாஜாலத் தொழில்நுட்பம் ஒளிந்திருக்கிறது.

இதயத் துடிப்பே ஜிபிஎஸ்!
அமெரிக்க போர் விமானம் ஒன்று ஈரான் எல்லைக்குள் சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானி தப்பித்து பாராசூட் மூலம் மலை இடுக்குகளில் மறைந்து கொண்டார். வழக்கமான சிக்னல்கள் மூலம் அவரைத் தேடிய அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த இக்கட்டான சூழலில்தான், சிஐஏ தனது ரகசிய ஆயுதமான 'கோஸ்ட் மெர்மெர்' சிஸ்டத்தை முதல்முறையாகக் களமிறக்கியது.
எப்படி கண்டுபிடித்தனர்? என்ன நடந்தது?
இந்தத் தொழில்நுட்பம், 'குவாண்டம் மேக்னடோமெட்ரி' (Quantum Magnetometry) அடிப்படையில் செயல்படுகிறது. அதாவது, ஒரு மனித இதயத்தின் துடிப்பிலிருந்து வெளியாகும் மிக நுண்ணிய மின்காந்த அலைகளை, மைல் கணக்கிற்கு அப்பால் இருந்தே துல்லியமாகப் படம்பிடிக்கும். அந்த அலைகளை வைத்தே கண்டுபிடிக்கலாம். காடுகளில் மனிதர்கள் சிக்கினால் இதை வைத்து பார்க்கலாம்.
"ஒரு பெரிய கால்பந்து மைதானத்தில் கிளம்பும் இரைச்சலுக்கு நடுவே, ஒருவரின் குரலை மட்டும் பிரித்தெடுப்பதைப் போன்றது இது. உங்கள் இதயம் துடித்தால் போதும், நாங்கள் உங்களைக் கண்டுபிடித்துவிடுவோம்" என இந்தத் திட்டம் குறித்து சிஐஏ தரப்பு வியப்பைக் கிளப்பியுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு
இந்தத் தொழில்நுட்பத்தின் வெற்றி குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "வைக்கோல் போரில் தொலைந்த ஊசியைக் கண்டுபிடிப்பது போன்ற காரியத்தைச் சிஐஏ செய்து முடித்திருக்கிறது. சுமார் 40 மைல் தொலைவில் இருந்தே அந்த விமானி இருக்குமிடத்தைச் சிஐஏ மிகத் துல்லியமாகக் கண்டறிந்தது நம்பவே முடியவில்லை," எனப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
சிஐஏ இயக்குநர் ஜான் ராட்க்ளிஃப் இது குறித்துக் கூறுகையில், "எதிரிகளின் கண்களுக்குத் தெரியாமல் மலை இடுக்கில் மறைந்திருந்த நமது வீரரை, சிஐஏ-வின் கண்கள் கண்டுபிடித்துவிட்டன. அவர் உயிருடன் இருப்பதை இந்தத் தொழில்நுட்பம் உறுதி செய்தது," என்றார்.
யார் இந்த 'கோஸ்ட்' கருவியை உருவாக்கியது?
லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் ரகசியப் பிரிவான 'ஸ்கங்க் ஒர்க்ஸ்' (Skunk Works) தான் இந்த 'கோஸ்ட் மெர்மெர்' கருவியைத் தயாரித்துள்ளது. பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களில் பொருத்தப்பட்டுச் சோதிக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், தற்போது போர் விமானங்களிலும் பயன்படுத்தப்பட உள்ளது.
ஈரானின் வறண்ட பாலைவனப் பகுதி, மற்ற சிக்னல் இடையூறுகள் இன்றி இந்தச் சோதனையைச் செய்யச் சாதகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. 'கோஸ்ட்' (Ghost) என்ற பெயர் சூட்டப்பட்டதற்கும் ஒரு சுவாரஸ்யமான காரணம் உண்டு. உலகத்தின் கண்களுக்குத் தெரியாமல் 'மறைந்து போன' ஒருவரைத் தேடிக் கண்டுபிடிப்பதால் இதற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டதாம்!
விஞ்ஞானமும் உளவுத்துறையும் கைகோர்த்தால், இனி ஒளியுமிடம் எதுவுமில்லை என்பதே இந்த 'கோஸ்ட் மெர்மெர்' சொல்லும் செய்தி!
-
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications