எகிப்து: மோர்சி ஆதரவாளர்கள் பேரணி மீது துப்பாக்கிச் சூடு; 13 பேர் பலி
கெய்ரோ: எகிப்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் முகமது மோர்சியின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
எகிப்தில் முன்னாள் அதிபர் முகமது மோர்சியை மீண்டும் பதவியில் அமர்த்தக் கோரியும், புதிய அரசியலமைப்பு சட்டம் குறித்த வாக்கெடுப்பை ரத்து செய்யவும் வலியுறுத்தியும் அவரது இயக்கத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தலைநகர் கெய்ரோவில் முகாம்கள் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, வாரத்தின் வெள்ளிக்கிழமை ‘ஜும்மா' தொழுகைக்கு பிறகு அவர்கள் சாலைகளில் பேரணியாக சென்று மீண்டும் எகிப்தின் அதிபராக மோர்சியை அமர்த்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், மோர்சிக்கு ஆதரவாக போராடி வரும் சகோதரத்துவ அமைப்பை எகிப்தின் தற்காலிக பிரதமர் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல் வெள்ளிக்கிழமையான நேற்றும் தொழுகைக்கு பின்னர் ஆயிரக்கணக்கான மோர்சியின் ஆதரவாளர்கள் தலைநகர் கெய்ரோ, அலெக்ஸாண்ட்ரியா, ஃபயும், மின்யா, சூயஸ் கால்வாய் பாயும் இஸ்மாய்லியா உள்ளிட்ட நகரங்களின் சாலைகளில் பேரணியாக சென்றனர்.

அவர்கள் மீது மோர்சியின் எதிர்ப்பாளர்களும், ராணுவ வீரர்களும் திடீர் தாக்குதல் நடத்தினர். பேரணிக்குள் நுழைந்த அவர்கள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். பயங்கர ஆயுதங்களுடன் பேரணியாக வந்த 120 பேர் கைது செய்யப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.
மோர்சியின் ஆதரவாளர்களின் மீது ராணுவமும் மோர்சியின் எதிர்ப்பாளர்களும் நடத்திய தாக்குதல்களில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications