"அத்தனையும் ஆபாசம்!" ஆணுறைகளை பலூன்களாக பறக்கவிட்ட பாகிஸ்தான் அரசியல்வாதிகள்! காரணத்தை கேட்டால் ஷாக்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஆணுறைகளை பலூன்களாக பறக்கவிட்டதாகச் சொல்லி இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அங்கே இந்த முறை மும்முனை போட்டி நிலவுவதாகப் போட்டி கடுமையாக இருக்கும் எனச் சொல்லப்பட்டது.

Condom-Shaped Balloons Flown in Pakistan as a part of election Victory celebrations

இந்தத் தேர்தலில் இம்ரான் கான் சிறையில் இருந்த நிலையில், அவரது கட்சியினர் கட்சியினர் பல ஒடுக்குமுறைகளைச் சந்தித்தனர். தற்போது வரை வெளியான தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போதும் அவரது ஆதரவில் களமிறங்கிய சுயேச்சைகளை அதிக இடங்களில் வெல்லும் சூழலில் உள்ளனர்.

ஷாக் வீடியோ: இதற்கிடையே பாகிஸ்தானில் தேர்தல் கொண்டாட்டத்தின் போது நடந்ததாகச் சொல்லப்படும் வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அங்குத் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டு இருந்த போது ஆணுறை வடிவில் இருக்கும் பலூன்களை அங்குள்ள முக்கிய அரசியல் கட்சியின் தொண்டர்கள் பரக்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த பிப்.5ஆம் தேதி நடந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. அடிப்படை அறிவு கூட இல்லாமல் எப்படி கட்சி தொண்டர்கள் இப்படிச் செய்கிறார்கள் என்றே புரியவில்லை என்று பலரும் சாடி வருகின்றனர். இந்தியாவிலும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் அறிவு அவ்வளவு தான் என்றும் அவர்கள் நக்கலடித்து வருகின்றனர்.

அரசியல்வாதி: சுமார் 50 நொடிகள் ஓடும் அந்த வீடியோ பாகிஸ்தானில் ஏதோ திறந்தவெளியில் எடுக்கப்பட்டது போலத் தெரிகிறது. அதில் கட்சியின் உள்ளூர் தலைவர் ஒருவர் காரில் இருந்து இறங்கி அந்த பலூன்களை பறக்க விடுகிறார். சில பலூன்களை பறக்கவிடும் அவர், அங்கிருந்த தொண்டர்களைப் பார்த்து சில நொடிகள் கை அசைக்கிறார். பின்னர் அவர் அங்கிருந்து கிளம்பிவிடுகிறார்.

அந்த பலூன்கள் பார்க்க அப்படியே ஆணுறைகள் போலத் தான் இருக்கிறது. இதுவே இணையத்தில் மிகக் கடுமையான விமர்சனங்கள் எழக் காரணமாக அமைந்துள்ளது. அதேநேரம் சிலர் அது ஆணுறைகளில் இருந்து செய்யப்பட்டது இல்லை. கட்சியின் சின்னத்தைப் போல இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் பலூனை அப்படிப் பறக்க விட்டுள்ளதாகவும் கூறி வருகின்றனர்.

முக்கியம்: இந்தத் தேர்தல் பாகிஸ்தான் நாட்டிற்கு ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பாகிஸ்தானில் பொதுவாகவே ராணுவத்தின் ஆதிக்கம் தான் இருக்கும். எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும் ராணுவத்திடம் தான் பவர் இருக்கும். இந்த முறை ராணுவம் இம்ரான் கானை ஒழித்துக் கட்ட முடிவு செய்தே அவருக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்தன.

அவரை சிறையில் அடைத்து அவரது கட்சி சின்னத்தையும் முடக்கினார்கள். ஆனால், அவை அனைத்தையும் தாண்டி இம்ரான் கான் சூழல் உருவாகியுள்ளது. ஆனால், அவர்களால் ஆட்சியை அமைக்க முடியுமா அல்லது வழக்கம் போல ராணுவம் உள்ளே வந்து குழப்பத்தை ஏற்படுத்துமா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+