15 வினாடியில் கூலிங்.. ஷாவ்மி அறிமுகம் செய்த சத்தமில்லாத ஏசி.. 30% மின்சாரம் குறையும்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: ஷாவ்மி நிறுவனம் சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ள மிஜியா (Mijia Air Conditioner Pro) ஏசியை பற்றி தான் உலகில் பேச்சாக உள்ளது. ஏனெனில் அதிவேக கூலிங் வசதியுடன் அறிமுகம் ஆகி உள்ளது. இந்த மிஜியா ஏசி ஆன் செய்த வெறும் 15 விநாடிகளில் அறையைக் குளிர்விக்கத் தொடங்கும். அதேபோல் 30 விநாடிகளில் வெப்பப்படுத்தவும் செய்யும். இது சத்தமில்லாமல் இயங்கும் என்பதுதான் கூடுதல் ஸ்பெஷல். இது மிகக் குறைந்த சத்தத்துடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தூக்கத்தின் போது எந்த இடையூறும் இருக்காது என்கிறது ஷாவ் நிறுவனம்.

கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், பலர் ஏசி போடாமல் பகலில் உட்கார முடிவது இல்லை.. இரவில் தூங்க முடிவது இல்லை. எந்த நேரமும்ஏசி போட்டால் கரெண்ட் பில் மயக்கமே வரவழைக்கும்., ஏனெனில் அந்த அளவிற்குமிக அதிகமாகும்.. அதனால் பணக்காரர்கள் ஏசி 24 மணி நேரம் பயன்படுத்துகிறார்கள். நடுத்தர குடும்பம் இரவில் மற்றும் பகலில் தேவைப்படும் போது பயன்படுத்துகிறார்கள். ஏழை மக்கள் பலர் வெறும் 2 மணி நேரம் ஓட்டிவிட் ஆப் செய்து விடுகிறார்கள். இந்நிலையில் ஷாவ்மி நிறுவனம் மிஜியா ஏசியை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏசி சீனாவில் மட்டும் அறிமுகம் ஆகி உள்ளது. இந்த மிஜியா ஏசி ஆன் செய்த வெறும் 15 விநாடிகளில் அறையைக் குளிர்விக்கத் தொடங்கு சத்தமே இல்லாமல் இயங்கும். இதில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், அறையின் தட்பவெப்பநிலையை உணர்ந்து அதற்கு ஏற்ப தானாகவே குளிர்ச்சியை மாற்றியமைக்கும்.

Mijia Air Conditioner Pro

இது மின்சாரத்தை மிச்சப்படுத்தும் 'APF' (தரவரிசையில் முன்னணியில் உள்ளது). இதனால் கரண்ட் பில் குறையும். ஏசியின் உட்புறத்தை அதுவே சுத்தம் செய்து கொள்ளும் வசதி இருப்பதால், பாக்டீரியாக்கள் அண்டாது மற்றும் காற்று தூய்மையாக இருக்கும். இது தற்போது சீன சந்தையில் அறிமுகமாகியுள்ளது, விரைவில் உலக நாடுகளுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் இதன் விலை 1,699 யுவான் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ₹23,275 ஆகும். குறிப்பு: இது நேரடி மாற்று விலை மட்டுமே. இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும்போது வரிகள் மற்றும் பிற கட்டணங்களால் விலை அதிகரிக்கலாம். நம்மூருக்கு வந்தால் என்ன நன்மைகள்?

இந்த ஏசி இந்தியாவிற்கு அறிமுகமானால் பின்வரும் நன்மைகள் கிடைக்கும்:30% மின்சார சேமிப்பு உறுதி. இதில் உள்ள அடுத்த தலைமுறை ஆற்றல் சேமிப்பு அல்காரிதம் மூலம் மின்சாரப் பயன்பாடு 30% வரை குறையும். இந்தியாவின் கோடைகால மின்சாரப் பில் சுமையைக் குறைக்க இது உதவும்.

3 நிமிடங்களிலேயே ஒரு அறையைக் குளிர்விக்கும் திறன் கொண்டது. 740 m³/h காற்றோட்ட வேகம்பெரிய அறைகளுக்கும் ஏற்றது. சுய சுத்தம் (Self-Cleaning): உள் மற்றும் வெளி யூனிட்கள் இரண்டையுமே தானாகச் சுத்தம் செய்து கொள்ளும் வசதி இருப்பதால், பராமரிப்புச் செலவு குறையும். உங்கள் போனில் உள்ள ஷாவ்மி ஆப் மூலமே எங்கிருந்து வேண்டுமானாலும் ஏசியைக் கட்டுப்படுத்தலாம்.

நம்மூருக்கு இது செட் ஆகுமா? தொழில்நுட்ப ரீதியாக இது இந்தியாவிற்கு மிகவும் ஏற்றது. குறிப்பாக, இதில் உள்ள 'Level 1 Energy Efficiency' மற்றும் 'APF 5.45' மதிப்பீடு, இந்தியாவின் வெப்பமான காலநிலைக்குத் தேவையான அதிக குளிர்ச்சியையும் அதே சமயம் குறைந்த மின்சார நுகர்வையும் உறுதி செய்யும். இந்தியாவில் வோல்டேஜ் மாறுபாடுகள் அதிகம் என்பதால், அதற்கேற்ற ஸ்டெபிலைசர் வசதியுடன் வருவது அவசியம். மேலும், ஷாவ்மி இந்த மாடலை இந்தியாவுக்குக் கொண்டு வரும்போது அதன் "HyperOS" கனெக்டிவிட்டியை இந்திய சர்வர்களுடன் ஒருங்கிணைக்க வேண்டியிருக்கும். பட்ஜெட் விலையில் அதிக தொழில்நுட்ப வசதிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு, குறிப்பாக வாடகை வீட்டில் வசிக்கும் இளம் தம்பதிகளுக்கு (1HP திறன் என்பதால்) இது ஒரு சிறந்த தேர்வாக அமையும். ஆனால் இந்தியாவில் எப்போது அறிமுகம்ஆகும் என்பது தெரியவில்லை..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+