1 லட்சத்தை தொட்டது கொரோனா பாதிப்பு.. விஸ்வரூபம் எடுத்த வுஹன் வைரஸ்.. உலக வல்லரசு நாடுகள் திணறல்!
உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டு இருக்கிறது.
பெய்ஜிங்: உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொட்டு இருக்கிறது.
Recommended Video
கொரோனா வைரஸ்.. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உருவான இந்த வைரஸ் தற்போது மொத்த உலகத்தையும் புரட்டிப்போட்டு இருக்கிறது. சீனாவில் வுஹனில் உருவான வைரஸ் தற்போது உலகை மொத்தமாக ஆட்டிப்படைத்து வருகிறது.
சீனாவில் தொடங்கி இருந்தாலும் தற்போது 85 நாடுகளில் இந்த வைரஸ் பரவி இருக்கிறது. மிக மிக சிறிய தீவுகளில் கூட இந்த வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

எவ்வளவு
கொரோனா வைரஸால் பாதிப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தொட்டுள்ளது. 102,241பேர் உலகம் முழுக்க கொரோனா வைரஸால் பாதிப்பு. சீனாவில்தான் அதிகபேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் . சீனாவில் 86000 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க 3497 கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர் . சீனாவில் 3070 பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர்.

இந்தியா என்ன நிலை
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாக ஏற்பட்டு வருகிறது. டெல்லியில்தான் அதிக பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.ஹரியானாவில், உத்தரகாண்டிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. டெல்லியில் பேடிஎம் ஊழியர் ஒருவருக்கும், நேற்று இன்னொரு டெல்லி இளைஞருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது.

அமெரிக்கா எப்படி
அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்குதல் மொத்தம் 307 பேருக்கு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 17 பேர் பலியாகி இருக்கிறார்கள். புளோரிடாவில் முதல் நபர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இன்னொரு பக்கம் தென்கொரியாவில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு 483 பேருக்கு நேற்று வைரஸ் தாக்கியது. மொத்தமாக 7000 பேருக்கு வைரஸ் தாக்கியுள்ளது. 148 பேர் பலியாகி உள்ளனர்.

ஈரான் எப்படி
அதேபோல் ஈரானில் மொத்தம் 4747 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 1234 நேற்று மட்டும் வைரஸால் பாதிக்கப்பட்டனர். அங்கு ராணுவத்தை களமிறக்கி மக்களை கட்டுப்படுத்தி வருகிறார்கள். அங்கு 128 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் இத்தாலியில் இதுவரை 79 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று மட்டும் 27 பேர் பலியானார்கள். அங்கு 2036 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் உள்ளது.

சீனாவில் எப்படி
சீனாவில் இந்த வைரஸ் கொஞ்சம் வேகம் குறைந்துள்ளது. அங்கு நேற்று 3070 பேருக்கு வைரஸ் பரவி உள்ளது. நேற்று 99 பேருக்கு மட்டுமே வைரஸ் பரவியது. அங்கு விரைவில் கொரோன வைரஸ் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆனால் சீனா மொத்தமாக இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து வெளியே வர இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்கிறார்கள்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications