முதலீடு செய்ய விடுங்கள்.. விதிமுறையை மீறாதீர்கள்.. இந்தியாவை நெருக்கும் சீனா.. மோதல் தொடங்கியது!
இந்தியாவில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய எப்போதும் போல அனுமதிக்கப்பட வேண்டும், கட்டுப்பாடுகள் எதையும் விதிக்க கூடாது என்று சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் கருத்து தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்: இந்தியாவில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய எப்போதும் போல அனுமதிக்கப்பட வேண்டும், கட்டுப்பாடுகள் எதையும் விதிக்க கூடாது என்று சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் தற்போது வெளிநாட்டு நிறுவனங்கள் இரண்டு விதமான முதலீடுகளை செய்ய முடியும். ஒன்று நேரடி முதலீடு, இன்னொரு முதலீடு அரசு வழியிலான முதலீடு. 2 நாடுகளை தவிர உலகில் இருக்கும் மற்ற எல்லா நாடுகளும் இந்தியாவில் நேரடியாக அரசின் அனுமதியை கேட்காமலே இந்தியாவில் முதலீடு செய்ய முடியும்.
இந்தியாவில் முதலீடு செய்த பின் வெளிநாட்டு நிறுவனங்கள் அரசிடம் தகவல் தெரிவிக்கலாம். அதே சமயம் பாகிஸ்தான், வங்கதேசம் இரண்டு நாட்டு நிறுவனங்கள் மட்டும் மத்திய அரசிடம் அனுமதி வாங்கிய பின்தான் இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மீது முதலீடு செய்ய முடியும்.

சீனா மீது கட்டுப்பாடு
இந்த நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன் மத்திய அரசு முக்கியமான விதி ஒன்றை இதில் மாற்றியது. அதன்படி இந்தியாவுடன் எல்லையை பகிரும் எந்த நாடாக இருந்தாலும், இனி அரசிடம் அனுமதி வாங்கிய பின்தான் இந்தியாவில் முதலீடு செய்ய முடியும் என்று அறிவித்தது. இந்தியாவில் உள்ள நிறுவனங்களை சீனா வாங்குவதை, முதலீடு செய்வதை தடுக்கும் வகையில் இந்தியா இந்த சட்டத்தை கொண்டு வந்தது.

இதுதான் காரணம்
இதன் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம் போல இனி சீனாஇந்தியாவில் நேரடியாக முதலீடு செய்ய முடியாது. கொரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுக்க பொருளாதாரம் சரிந்து உள்ளது. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் பெரிய சரிவை சந்தித்துள்ளது. இதை பயன்படுத்தி சீன பல நாடுகளில் உள்ள நிறுவனங்களை வாங்கி வருகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் உள்ள சில நிறுவனங்களை சீனா வாங்கியது.

உலக நாடுகள் அழுத்தம்
இந்த நிலையில் வரிசையாக உலக நாடுகள் சீனாவின் முதலீட்டிற்கு தடை விதிக்க தொடங்கி உள்ளன. அதன்படி ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் தங்கள் நாட்டில் அந்நிய முதலீடுகளை கண்காணிக்கும், அனுமதி அளிக்கும் விதிகளை கடுமையாக்கி உள்ளது. தங்கள் நாட்டில் சீனா புகுந்து நிறுவனங்களை வாங்குவதை தடுக்க இப்படி விதிகளை மாற்ற தொடங்கி உள்ளனர். இந்தியாவும் அதை பின்பற்றி உள்ளது.

சீனா கண்டனம்
இந்தியாவின் இந்த அதிரடியான செயலுக்கு தற்போது சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் புதிய அந்நிய முதலீட்டு விதி குறித்து இந்தியாவின் சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவின் புதிய அந்நிய முதலீட்டு விதி, விதிமுறைக்கு எதிரானது. உலக வர்த்தக மையம் வகுத்து இருக்கும் விதிகளுக்கு எதிராக இந்தியா செயல்படுகிறது.

முதலீட்டு விதிமுறைக்கு எதிரானது
சுதந்திரமான முதலீட்டு விதிமுறைக்கு எதிரானது இது. சீனாவின் முதலீடுகளை தடுக்கும் வகையில் இந்தியா இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்தியா அனைத்து நாடுகளையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். இந்தியா அனைவருக்கும் வியாபாரம், வர்த்தகம் செய்ய ஒரே மாதிரி வாய்ப்பு அளிக்க வேண்டும். இந்தியாவில் சீனாவின் முதலீடுகளை மீண்டும் நேரடியாக அனுமதிக்க வேண்டும்.

கண்டனம்
சந்தையில் நிலவரம் எப்படி இருக்கிறதோ அதை பொறுத்து நிறுவனங்கள் தாங்களாக முடிவு எடுக்க இந்தியா அனுமதிக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு சீனாவின் பங்கு, முதலீடு மிக முக்கிய காரணம். அதேபோல் ஜி20 நாடுகளின் ஒப்பந்தத்திற்கு, நட்பிற்கும் எதிராக இந்தியா செயல்படுகிறது. இந்தியா உடனடியாக இந்த விதிமுறையை திரும்ப பெற வேண்டும் என்று சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜி ரோங் கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications