அதிசயம்.. சீனாவில் வேகம் குறைந்த கொரோனா.. நேற்று ஒருவர் மட்டுமே பலி.. 4 பேருக்கு பாதிப்பு.. ஆனால்!
சீனாவில் கொரோனா காரணமாக நேற்று ஒருவர் மட்டுமே பலியானார்
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக 80,797 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சீனாவில் கொரோனா காரணமாக நேற்று ஒருவர் மட்டுமே பலியானார்.
Recommended Video
உலகம் முழுக்க வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சீனாவிற்கு வெளியே விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகின் மிக மோசமான பெருந்தொற்றுநோயாக கொரோனா மாறியுள்ளது. நேற்று முதல்நாள்தான் கொரோனவை, உலக சுகாதார மையம் பெருந்தொற்றுநோய் என்று அறிவித்தது.
சீனாவில் வுஹன் நகரத்தில்தான் இந்த வைரஸ் தோன்றியது. வுஹன் நகரத்தில் உள்ள மீன் மார்க்கெட் ஒன்றில் இந்த வைரஸ் தோன்றி இருக்கலாம் அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா வேகம்
சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக 80,797 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நேற்று புதிதாக 4 பேருக்கு மட்டுமே இந்த வைரஸ் தாக்கியது. அங்கு இதுவரை 3,170 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் கொரோனா காரணமாக நேற்று ஒருவர் மட்டுமே பலியானார். சீனாவில் கொரோனா பரவும் வேகம் திடீரென்று குறைந்துள்ளது. கொரோனா அங்கு தோன்றிய பின் மிக குறைவான இறப்பு நேற்றுதான் ஏற்பட்டது.

எல்லோரும் டிஸ்சார்ஜ்
கொரோனவை குணப்படுத்த வேண்டும் என்று சீனாவில் வுஹன் பகுதியில் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டது. இந்த மருத்துவமனையில் 1500 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் எல்லோரும் தற்போது குணப்படுத்தப்பட்டுள்ளனர். ஆம், வுஹன் சிறப்பு மருத்துவமனையில் இருந்த அனைவரும் குணப்படுத்தப்பட்டனர். இவர்கள் எல்லோரும் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் வெளியே நிலை
ஆனால் சீனாவிற்கு வெளியே கொரோனா வைரஸ் இன்னும் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுக்க கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4,627லிருந்து 4,972 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,26,139லிருந்து 1,34,559 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் பலி எண்ணிக்கை 1,016 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலி நிலை
இத்தாலியில் இந்த வைரஸால் 15,113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 2600 பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். ஈரானில் 10,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 429 பேர் இந்த வைரஸால் இதுவரை பலியாகி உள்ளனர். தென் கொரியாவில் 7,979 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வெறும் 69 பேர்தான் இந்த வைரசால் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா நிலை என்ன
இந்தியாவில் இதுவரை 74 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 12 பேருக்கு புதிதாக இந்த வைரஸ் ஏற்பட்டது. கர்நாடகாவை சேர்ந்த முதியவர் ஒருவர் இந்த வைரஸால் பலியானார். இதுதான் இந்தியாவில் கொரோனா காரணமாக முதல் பலியாகும். அமெரிக்காவில் 1,716 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 41 பேர் இதனால் பலியாகி உள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications