டாக்டர் லி இறப்பதற்கு முன்பே இறந்ததாக அறிவித்த அரசு.. கொதித்தெழுந்த சீனர்கள்.. நேற்று என்ன நடந்தது?
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை கண்டுபிடித்த டாக்டர் லி வென்லியாங் இறப்பதற்கு முன்பே இறந்ததாக நேற்று செய்தி வெளியிடப்பட்டது.
Recommended Video
பெய்ஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை கண்டுபிடித்த டாக்டர் லி வென்லியாங் இறப்பதற்கு முன்பே இறந்ததாக நேற்று செய்தி வெளியிடப்பட்டது. சீன மக்களை இந்த செயல் பெரும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் உருவானதை முதல் முதலில் கண்டுபிடித்து அரசை எச்சரித்த டாக்டர் தற்போது அதே நோய் வைரஸ் தாக்குதலால் பலியாகி உள்ளார். சீனாவை சேர்ந்த லி வென்லியாங் என்ற மருத்துவர் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கண்டுபிடித்துவிட்டார்.
இவர்தான் அந்நாட்டு அரசுக்கு இந்த வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுத்தது. அந்நாட்டு அரசுக்கு இது தொடர்பான ஆதாரங்களை வெளியிட்டது. அதேபோல் சமூக வலைத்தளத்திலும் இது தொடர்பாக செய்தி வெளியிட்டு, மக்களுக்கு இவர்தான் உண்மையை அறிவித்தது. இந்த நிலையில் சீனாவை இவரின் மரண செய்தி மொத்தமாக உலுக்கி உள்ளது.

இறக்க காரணம்
டாக்டர் லி சாகும் முன் பல விஷயங்களை கடந்து சென்று இருக்கிறார். முதல் கட்டமாக அவருக்கு நோய் தாக்கிய போது, தனக்கு தானே சிகிச்சை அளித்துக் கொண்டார். தனக்கு சிகிச்சை அளிக்கும் யாருக்கும் எதுவும் ஏற்பட்டு விட கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார். இந்த வைரஸ் குறித்து முழுமையாக கண்டுபிடிக்கும் முன்பே, அது தொட்டால் பரவுகிறது என்பதை உணர்வு கொண்டு தனியாக சிகிச்சை பெற்றார். இதுவும் இவர் விரைவில் மரணம் அடைய ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால்
ஆனால் அவரை வெளியே கொண்டு வந்த பின், அவருக்கு லேசாக நாடி இருப்பது கண்டுபிடிக்கப்ட்டது. அங்கிருந்த மருத்துவர் ஒருவர் இதை கவனித்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவருக்கு மீண்டும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.அதன்பின் அவருக்கு உயிர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் செய்தியாளர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் சுமார் 4 மணி நேரம் லி உயிரோடு இருந்தார்.

கடைசியில் என்ன
அதன்பின் மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இவரின் இதய துடிப்பு அதிகம் ஆகி அதன்பின் நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்தார். அதற்கு அடுத்தே இவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. சீனாவில் கொரோனாவை கண்டுபிடித்த ஒருவரின் மரணத்தில் இப்படி அந்நாட்டு அரசு பொறுப்பற்று செயல்பட்டது, மாற்றி மாற்றி தகவல்களை வெளியிட்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. லியின் மரணத்திற்கு அந்நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து இரங்கல் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Click it and Unblock the Notifications