கொரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்திற்கு ஓடிவந்த ரஷ்யா.கிடுகிடு பாதிப்புக்கு என்ன காரணம்?
மாஸ்கோ: உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யா வந்துள்ளது அந்நாட்டு மக்களுக்கு கவலையை அளித்துள்ளது.
Recommended Video
கொரோனா பாதித்த நாடுகளில் தற்போது முதல் இடத்தில் இருக்கும் நாடு அமெரிக்கா. இதற்கு அடுத்த இடத்தில் ஸ்பெயினும் , இத்தாலியும் இருந்தன. இந்த நிலையில் ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது.
தினமும் 10 ஆயிரம் என அதிகரித்து உலகளவில் 5 ஆவது இடங்களுக்கு மேல் ரஷ்யா இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 10,899 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தொடர்ந்து 10-ஆவது நாளாக கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

அதிபர்
கொரோனா பாதித்தோரில் அதிபர் விளாதிமிர் புதினின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பேஸ்கோவும் ஒருவர். அந்நாட்டு பிரதமர் மிகைல் மிஸ்ஹுஸ்டினைக்கு அடுத்து கொரோனா வந்த உயர்பதவி வகிக்கும் அதிகாரி பேஸ்கோவ் ஆவார். இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கொரோனா பாதித்த நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ரஷ்யா முன்னேறி வந்துவிட்டது.

இத்தாலி
அதாவது ஸ்பெயினையும் இத்தாலியையும் பின்னுக்கு தள்ளிவிட்டு ரஷ்யா இரண்டாவது இடத்திற்கு வந்துவிட்டது. அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டியது. அடுத்தது ஸ்பெயினில் 2.69 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குணமடைந்தோர்
ஆனால் ரஷ்யாவில் 2.32 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் ஸ்பெயினில் இதுவரை 1.80 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில் 62 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர். ஆனால் ரஷ்யாவில் 1.86 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அத்துடன் 43 ஆயிரம் பேர் மட்டுமே வீடு திரும்பியுள்ளனர்.

பரவல்
இத்தாலி, ஸ்பெயினுடன் ரஷ்யாவை ஒப்பிடும் போது இறப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆனால் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளோரின் எண்ணிக்கையும் குணமடைந்தோரின் எண்ணிக்கையையும் வைத்து பார்க்கும் போது ரஷ்யா, அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது. அத்துடன் நாள்தோறும் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் பாதிப்பும் அதிகமாகவே இருக்கும்.

அதிகாரிகள்
ரஷ்யாவில் தலைநகர் மாஸ்கோவில்தான் ஏராளமானோர் கொரோனாவா பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் இறப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளதற்கு காரணம் இங்கு அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உரிய சிகிச்சை அளித்ததே என அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

கட்டுமான பணிகள்
மாஸ்கோவில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் கட்டுமானப்பணிகள், தொழிற்சாலைகளில் பணியாற்றுவோர் தங்கள் பணிகளுக்கு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது. இதுவும் தொற்று அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் கொரோனா பாதிப்பு நிலவரத்தை பார்த்தால் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் வரும் என நிபுணர்கள் கூறியது இன்று நடந்துள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications