சொன்னபடி செய்த ரஷ்யா..இந்தியாவிற்கு ''ஸ்புட்னிக்-வி''டேட்டாக்களை அனுப்பிய புடின்..விரைவில் வேக்சின்?
மாஸ்கோ: ரஷ்யா தனது கொரோனா வைரஸ் வேக்சினான ஸ்புட்னிக் வி (Sputnik V) விவரங்களை இந்தியாவோடு பகிர்ந்துள்ளது. இந்தியாவிற்கு ரஷ்யா தனது சோதனை டேட்டாக்களை அனுப்பி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க அதிகரிக்க, வேக்சினுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் தினமும் 90000+ கேஸ்கள் வர தொடங்கி உள்ளது. இதனால் இந்தியாவில் எப்போது கொரோனா வேக்சின் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கேள்வி எழுந்துள்ளது.
உலகம் முழுக்க கொரோனா வேக்சினுக்கான சோதனை நடந்து வருகிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலை, நோவாவேக்சின், சினோவேக்ஸ், பாரத் பயோ டெக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உலகம் முழுக்க ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இந்த சோதனையை செய்து வருகிறது.

ரஷ்யா எப்படி
அதிலும் தற்போது ரஷ்யாவின் வேக்சின் அந்த நாட்டில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. கடைசி கட்டமாக அங்கிருக்கும் மருத்துவர்கள் இந்த ஸ்புட்னிக் வி (Sputnik V) மருந்தை தங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்களும் கூட ஸ்புட்னிக் வி (Sputnik V) மருந்தை தங்களுக்கு பயன்படுத்த தொடங்கி உள்ளனர். கடந்த மாதம் ரஷ்யாவை சேர்ந்த செச்செநோவ் பகுதியில் இருக்கும் மாஸ்கோ ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டி கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து இருப்பதாக அறிவித்துள்ளது.

தரவில்லை
இந்த நிலையில் இந்த சோதனை டேட்டாக்களை ரஷ்யா வெளியிடாமல் இருந்தது. ஸ்புட்னிக் வி (Sputnik V) மருந்து குறித்த விவரங்களை, சோதனை டேட்டா தகவல்களை ரஷ்யா உலக நாடுகளுக்கு பகிராமல் இருந்தது. இந்த டேட்டாக்களை இந்தியா ரஷ்யாவிடம் கேட்டு வந்தது. சோதனை விவரங்களை அளித்தால், உங்கள் மருந்தை பயன்படுத்துவோம் என்று ரஷ்யாவிடம் இந்தியா தெரிவித்தது.

ரஷ்யா சென்றது
இதற்காக இந்திய குழு ஒன்று ரஷ்யாவிற்கு சென்றது. ஸ்புட்னிக் வி (Sputnik V) மருந்தின் சோதனை டேட்டா விவரங்களை ரஷ்யாவிடம் இருந்து பெறுவதற்காக இந்தியா ரஷ்யா சென்று இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது ரஷ்யா ஸ்புட்னிக் வி (Sputnik V) மருந்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனை விவரங்களை வெளியிட்டு உள்ளது.

எவ்வளவு பாதுகாப்பு
இந்த மருந்து எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறது, எத்தனை நாட்களில் உடலில் இந்த வேக்சின் செயல்படுகிறது என்பதை ரஷ்யா தனது டேட்டா மூலம் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்புட்னிக் வி (Sputnik V) வேக்சின் மனிதர்களிடம் வலிமையான எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் சோதனை 76 பேரிடம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்புட்னிக் வி மருந்து
இதனால் ரஷ்யாவின் மருந்து இந்தியாவில் பயன்பாட்டிற்கு வருகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி (Sputnik V) வேக்சினை இந்தியாவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முன் அதன் மூன்றாம் கட்ட சோதனை நிறைவு பெற வேண்டும். இந்த மூன்றாம் கட்ட சோதனையை இந்தியா தனியாக இங்கேயே நடத்தப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். ரஷ்யா அளித்த டேட்டா திருப்தி அளித்தால் மூன்றாம் கட்ட சோதனையை இந்தியாவில் செய்வார்கள்.

ரஷ்யா திட்டம்
இந்த மருந்தை பெரிய அளவில் உற்பத்தி செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் இறுதியில் மருந்து உற்பத்தி தொடங்கும். அதற்கு முன் 45000 பேரிடம் சோதனை செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது. இதில் இந்தியாவிலும் இறுதிக்கட்ட சோதனை நடக்கும் என்கிறார்கள். இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் இந்த மருந்தை உற்பத்தி செய்ய ரஷ்யா ஏற்கனவே விருப்பம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35












Click it and Unblock the Notifications