ஊழல் வழக்கில் வாய்தா கேட்ட நெதன்யாகு.. 'வாய்ப்பில்லை ராஜா'! விசாரணைக்கு ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
டெல் அவிவ்: ஊழல், முறைகேடு, மோசடி என மூன்று வழக்குகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நெருக்கடியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு வேண்டும் என்று வாய்தா கேட்டிருந்தார். இதற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. உடனடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.
வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகியிருந்த நெதன்யாகுவின் வழக்கறிஞர், "ஈரானுடனான போர் காரணமாக அடுத்த 2 வாரங்களுக்கு வழக்கு விசாரணையிலிருந்து ஆஜராக எனது கட்சிக்காரருக்கு விலக்கு அளிக்க வேண்டும். ஏனெனில் அவர் பாதுகாப்பு விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறார்" என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால் டெல் அவிவ் நீதிமன்றம், "விசாரணையை ரத்து செய்வதற்கோ, தாமதப்படுத்துவதற்கோ இந்த கோரிக்கைள் ஏற்புடையதாக தெரியவில்லை. அவரை நேரில் ஆஜராக சொல்லுங்கள்" என்று கறாராக கூறிவிட்டது.
பாவம் நெதென்யாகு
ஈரானுடன் போர், காசாவில் தாக்குதல் என்று 24/7 மணி நேரமும் சண்டை களத்திலேயே காலத்தை கழித்துக்கொண்டிருக்கும் நெதன்யாகுவுக்கு இது சோதனைக்காலம் என்றே சொல்லலாம்.
வாழ்க்கையில் பல தடைகளை கடந்து, படாத துயரங்களை பட்டு, டஜன் கணக்கில் அவமானங்களை தோளில் சுமந்து (அதென்ன வாழை தாரா?) நெதன்யாகு ஒரு வழியாக இப்போது வரை இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பதவியில் நீடித்து வருகிறார். மேற்குறிப்பிட்ட கஷ்டங்களை உலகில் உள்ள 800 கோடி மக்களும் சந்தித்திருந்தாலும், உயர் பொறுப்பில் இருப்பவர்கள் இதை பிரத்யேகமாக சொல்லிக்காட்டிக்கொள்வது இயல்பானதுதான். ஆனால், இப்படியெல்லாம் இருந்து வந்த நெதன்யாகு ஏன் ஊழல் வழக்கில் சிக்க வேண்டும்?
கைமாறாக பெறப்பட்ட ஆபரணங்கள்
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரும் பயணக்காரர் ஜேம்ஸ் பேக்கர், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் அர்னான் மில்சன் ஆகியோருடன் நெதன்யாகுவுக்கு 2011-2016 காலத்தில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது நெதன்யாகு பிரதமராகத்தான் இருந்தார். இவர் தனது பதவியை பயன்படுத்தி மேற்குறிப்பிட்ட பெரிய மனுஷர்களுக்கு சேவகம் செய்திருக்கிறார். அமெரிக்கா விசா, நிதி சலுகைகள் என இந்த சேவக பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. இதற்கு கைமாறாக பெரிய அளவில் பணம், ஆபரணங்கள் கைமாறியுள்ளன.
படாத கஷ்டங்களை பட்டு மேலே வந்த நெதன்யாகு இதெல்லாம் செய்யலாமா? எனவே அவர் மீது 'Case 1000' என்கிற பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பத்திரிகையிலும் தலையீடு
சரி இதோடு விட்டரா? கிடையாது. இஸ்ரேலிய ஊடகங்கள் தன்னை பற்றியும் தன் ஆட்சியை பற்றியும் ஆஹா, ஓஹோ என எழுத வேண்டும் என்ற கேட்டுக்கொண்டார். பிரதமர் கேட்டால் ஊடகங்கள் மறுக்குமா? எல்லா ஊடகங்களும் அதை செய்தன. ஆனால் ஓரிரு ஊடகங்கள் அதை செய்ய மறுத்தன. உடனே கண் சிவந்த நெதன்யாகு, தனக்கு ஆதரவான ஊடகத்திற்கு சலுகைகளை கொடுத்து, எதிரான ஊடகத்தை முடக்கினார். இதற்காக இவர் மீது 'Case 2000' என்கிற பெயரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஊழல் வழக்கு
அதேபோல நெதன்யாகு தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த காலத்தில், இஸ்ரேலிய தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு சலுகைகளை வாரி இறைத்துள்ளார். பதிலுக்கு அங்கிருந்து பெரிய அளவில் பணம் மடை மாற்றப்பட்டிருக்கிறது. ஆக இருவரும் சேர்ந்து ஊரை அடித்து உலையில் போட்டிருக்கின்றனர். இதற்காக 'Case 4000' என்கிற வழக்கு நெதன்யாகு மீது பதியப்பட்டிருக்கிறது. மூன்று வழக்குகளில் இதுதான் மிகவும் முக்கியமான வழக்காகும்.
கறார் நீதிமன்றம்
இந்த வழக்குகளின் விசாரணை தொடங்கிய அதே நேரத்தில் பாலஸ்தீனம் மீது தாக்குதல் தொடங்கியது. போரை காரணம் காட்டி வாய்தா வாங்கி தள்ளியிருந்தார் நெதன்யாகு. ஆனால், இனி வாய்தா கிடையாது என்று வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் கட்-அன்ட் ரைட்டாக சொல்லிவிட்டது. இப்போது தெரிகிறதா போர் எதற்காக என்று. நீதிமன்றத்தின் உத்தரவால் நெதன்யாகுவுக்கு இது சோதனைக்காலமாக மாறியிருக்கிறது.
-
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
ஈரான் அணுசக்தி மையத்தை குறி வைத்த அமெரிக்கா! ருத்ர தாண்டவம் ஆடிய டிரம்ப்! -
புனித அல்-அக்ஸா மசூதியை மூடிய இஸ்ரேல்.. பாலஸ்தீனியர்கள் உள்ளே நுழைய கூட அனுமதி மறுப்பு -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி












Click it and Unblock the Notifications