30,000 பேரை.. குட்டி டிஸ்னிலேண்டிற்குள் வைத்து பூட்டிய சீன அதிகாரிகள்.. அதிர்ச்சி தரும் சம்பவம்!
பெய்ஜிங்: சீனாவில் டிஸ்னிலேண்ட் ஒன்றில் 30 ஆயிரம் பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. கடந்த 2 வாரங்களில் சீனாவில் 550க்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. நேற்று மட்டும் 71 பேருக்கு கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.
சீனாவின் 14 பெரிய நகரங்களில் கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதனால் 10க்கும் மேற்பட்ட நகரங்களில் முழு லாக்டவுன் போடப்பட்டுள்ளது. சீனாவில் மூன்றாம் அலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சீனா
சீனாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தற்போது கோவிட் ஜீரோ திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் மொத்தமாக அவர் இருக்கும் பகுதியை லாக் செய்வது. அவர் கடந்த 21 நாட்களில் சந்தித்த எல்லோரையும் கண்டுபிடித்து உடனே அவர்களை தனிமைப்படுத்துவது. இது மட்டுமின்றி இன்னும் பல கடுமையாக லாக்டவுன் விதிகளை சீனா கடைப்பிடித்து வருகிறது.

டிஸ்னிலேண்ட்
இந்த நிலையில்தான் சீனாவில் டிஸ்னிலேண்ட் ஒன்றில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக மொத்த பகுதியும் மூடப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்காய் பகுதியில் இருக்கும் டிஸ்னிலேண்ட் உலகின் பிரபல டிஸ்னிலேண்ட்களில் ஒன்றாகும். இங்கு தினமும் பல ஆயிரம் பேர் வருவது வழக்கம். சீனாவில் கொரோனா பரவல் குறைவாக உள்ளதால் அங்கு டிஸ்னிலேண்ட் செயல்பட்டு வருகிறது.

பெண்
இந்த நிலையில்தான் டிஸ்னிலேண்டிற்கு நேற்று வந்த பெண் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் நேற்று முதல்நாள் கொரோனா சோதனைக்கு டெஸ்ட் கொடுத்துள்ளார். நேற்று டிஸ்னிலேண்டில் இருக்கும் போது அவருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. அவரிடம் அதிகாரிகள் , நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று விசாரணை நடத்திய போது, தான் டிஸ்னிலேண்டில் இருப்பதாக அந்த பெண் கூறியுள்ளார்.

டெஸ்டிங்
இதையடுத்து வேகமாக செயல்பட்ட அதிகாரிகள் மொத்த டிஸ்னிலேண்ட்டிற்கும் பூட்டு போட்டனர். அந்த டிஸ்னிலேண்டில் அப்போது 30 ஆயிரம் பேர் இருந்துள்ளனர். இதனால் மொத்தமாக எல்லோரையும் உள்ளே வைத்து டிஸ்னிலேண்டை பூட்டி உள்ளனர். இப்போது டிஸ்னிலேண்ட் உள்ளே இருக்கும் ஒவ்வொருவருக்கும் டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது.

30 ஆயிரம் பேர்
30 ஆயிரம் பேரும் டிஸ்னிலேண்டில் தற்போது கொரோனா டெஸ்ட்டிற்காக லைனில் காத்து இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் வரிசையாக சாம்பிள் எடுக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல மணி நேரமாக அங்கு பெரிய லைன் நின்று கொண்டு இருக்கிறது. சீனாவின் கடுமையான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இது காட்டி இருக்கிறது.

கடினம்
உலகில் மிகப்பெரிய கொரோனா டெஸ்டிங் சென்டர் போல டிஸ்னிலேண்ட் மாறியுள்ளது. அங்கு இருக்கும் மக்களுக்கு இதற்காக உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. டெஸ்ட் செய்யப்பட்ட எல்லோரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இங்கு பலர் இருப்பதால் சீனாவின் புதிய எபிசென்டராக டிஸ்னிலேண்ட் மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications