கொரோனா பற்றி 2019 இறுதியிலேயே சொன்னவர்.. சீனாவில் உயிருக்கு போராடும் பெண் செய்தியாளர்.. அதிர்ச்சி!
பெய்ஜிங்; 2019லேயே கொரோனா பரவல் குறித்து செய்தி வெளியிட்டு சீனாவில் கைதான ஷாங் ஷான் என்ற செய்தியாளர் தற்போது சிறையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் 2019 டிசம்பரில் கொரோனா பரவ தொடங்கிய காலத்தில் அந்நாட்டு அரசு அதை கடுமையாக மூடி மறைத்தது. முதலில் கொரோனா பரவவில்லை என்று பொய் கூறி வந்தது. அதன்பின் கொரோனா அவ்வளவு ஆபத்தான வைரஸ் கிடையாது என்றும் ஏமாற்றி வந்தது.
கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்த டாக்டர் லி வென்லிங் போன்றவர்களை சீனா சிறையில் அடைத்தது. அதன்பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டாக்டர் லி வென்லிங் இறந்து போனது குறிப்புடத்தக்கது.

கொரோனா
இந்த கொரோனா பரவல் குறித்து தொடக்கத்திலேயே எச்சரிக்கை விடுத்தவர்களில் சீனாவை சேர்ந்த ஷாங் ஷான் என்ற பெண் பத்திரிக்கையாளர்களின் ஒருவர். 38 வயதான இவர் 2019 டிசம்பரிலேயே கொரோனா குறித்து ரிப்போர்ட் செய்ய தொடங்கிவிட்டார். 2020 ஜனவரியில் கொரோனா வைரஸ் குறித்து தீவிரமாக கட்டுரைகளை எழுதி வந்தார். கொரோனா வைரஸ் மிக மோசமானது என்று கூறி உலக நாடுகளை எச்சரித்து வந்தார்.

கட்டுரை
ஷாங் ஷான் தனது மொபைல் போன் மூலம் வீடியோக்கள் எடுத்து அதை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வந்தார். இந்த நிலையில்தான் 2020ல் வுஹனில் இவர் செய்தி சேகரிக்க சென்ற போது சீன போலீசார் மூலம் கைது செய்யப்பட்டார். வதந்திகளை பரப்பியதாகவும், மக்கள் இடையே பதற்றத்தை உண்டாக்கியதாகவும் ஷாங் ஷான் கைது செய்யப்பட்டார்.

கைது
இவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் சிறையில் கடந்த சில மாதங்களாக இவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தனது விடுதலை வேண்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறது.உணவு உட்கொள்வதை ஷாங் ஷான் மறுத்து வரும் நிலையில் கட்டுப்படுத்தி மூக்கு வழியாக போலீசார் இவருக்கு உணவு வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது ஷாங் ஷான் உயிருக்கு போராடுவதாக அவரின் சகோதரர் ஷாங் ஜூ தெரிவித்துள்ளார்.

போராட்டம்
ஷாங் ஷான் தனது விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆனால் செய்தி சேகரிக்க சென்ற அவரை கைது செய்து கொடுமைப்படுத்தி வருகிறார்கள். உண்ணாவிரதம் காரணமாக தற்போது ஷாங் ஷான் உயிருக்கு போராடி வருகிறார். அவரின் உடல்நிலை மோசமாகிவிட்டது.

பழி வாங்குகிறது
அவரை சீன அரசாங்கம் வேண்டுமென்றே பழி வாங்குகிறது. கொரோனா பரவல் குறித்து சீனா மறைத்துவிட்டது. ஷாங் ஷான் பிழைக்க வாய்ப்பு குறைவு என்று ஷாங் ஷான்வின் சகோதரர் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி சீனாவை மட்டுமின்றி சர்வதேச மனித உரிமை அமைப்புகள், அம்னெஸ்டி போன்ற அமைப்புகளை கொதிப்பிற்கு உள்ளாக்கி உள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications