நல்ல முன்னேற்றம்.. முதல் தடுப்பூசி மக்களுக்கு எப்போது போடப்படும்.. உலக சுகாதார அமைப்பு பதில்
ஜெனிவா: கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் "நல்ல முன்னேற்றம்" அடைந்துள்ளனர். ஒரு சில சோதனைகள் மட்டுமே தாமதமான நிலையில் உள்ளன. எனினும் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் பயன்பாடடை 2021 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பின் (WHO) நிபுணர் தெரிவித்தார்.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. இது மனிதர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துள்ளது. இதேபோல் ஜெர்மனி, சீனா மற்றும் ரஷ்யாவும் தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளன. அவையும் நோய் எதிர்ப்பு சக்தியை தருவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
இப்படி உலகின் பல நாடுகளும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை உருவாக்குவதில் "நல்ல முன்னேற்றம்" அடைந்துள்ளன. இருந்த போதிலும் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் பயன்பாட்டை 2021 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் தலைவர் மைக் ரியான் கூறினார்

தோல்வியில்லை
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நியாயமான தடுப்பூசி விநியோகத்தை உறுதிப்படுத்த உலக சுகாதார அமைப்பு (WHO) செயல்பட்டு வருகிறது, ஆனால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.. தடுப்பூசி விஷயத்தில் நாம் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளோம். பல தடுப்பூசிகள் இப்போது 3 ஆம் கட்ட சோதனைகளில் உள்ளன. பாதுகாப்பு அல்லது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில். இதுவரை எதுவும் தோல்வியுற்றதில்லை.

எல்லாருக்குமானது
யதார்த்தமாக இது மக்களுக்கு இந்த தடுப்பூசி போடப்பட வாய்ப்பு உள்ள காலம் என்பதை அடுத்த ஆண்டின் முதல் பகுதியாகவே இருக்கும் சாத்தியமான தடுப்பூசிகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கும் உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வருகிறது. நாங்கள் இதைப் பற்றி நியாயமாக இருக்க வேண்டும், ஏனென்றால் இது உலகளாவிய நன்மை. இந்த தொற்றுநோய்க்கான தடுப்பூசிகள் செல்வந்தர்களுக்கு மட்டுமல்ல, ஏழைகள் உள்பட அனைவருக்குமானது.

கவனமாக இருக்க வேண்டும்
நாம் கொரோனா சமூக பரவுதல் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதில் கவனமாக இருக்க வேண்டும் நம் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கு நாம்எல்லாவற்றையும் செய்ய வேண்டும், மேலும் நம்முடைய சமூகத்தில் நோயைத் தடுப்பதே நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம். சமூகத்தில் நோயைக் கட்டுப்படுத்திய பின்னர், பள்ளிகளைத் திறக்க வேண்டும்." இவ்வாறு ரியான் கூறினார். அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் தொற்றுநோய் பரவியபோதும், மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து விவாதம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு இந்த கருத்தை வெளிப்படுத்தி உள்ளது.

அமெரிக்கா ஆர்வம்
பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என நிரூபிக்கப்பட்டதால் ஃபைசர் இன்க் மற்றும் ஜெர்மன் பயோடெக் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ள COVID-19 தடுப்பூசியின் 100 மில்லியன் டோஸை வாங்க அமெரிக்க அரசு 1.95 பில்லியன் டாலர் செலுத்த உள்ளது. ஜெர்மனியில் கொரோனா பரவல் முற்றிலும் குறைந்து அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.












Click it and Unblock the Notifications