ஜெர்மன்விங்ஸ் துணை விமானியின் வீட்டில் 'ரெய்டு': முக்கிய துப்பு கிடைத்துள்ளது
பிரான்க்பர்ட்: ஜெர்மன்விங்ஸ் விமானத்தை விபத்துக்குள்ளாக்கிய துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முக்கிய துப்புகிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மன்விங்ஸ் விமானம் தானாக விபத்துக்குள்ளாகவில்லை மாறாக அதன் துணை விமானி ஆன்ட்ரியஸ் லுபிட்ஸ்(28) தற்கொலை செய்ய நினைத்து அதை பிரான்சில் உள்ள ஆல்ப்ஸ் மலையில் மோதியது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் தற்கொலை செய்ய விமானத்தில் இருந்த 149 பேரின் உயிரை வாங்கிவிட்டார்.
லுபிட்ஸ் ஜெர்மனியின் பிரான்க்பர்ட் நகருக்கு அருகே உள்ள மான்டபாரில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். டுசல்டார்ப் நகரிலும் அவருக்கு ஒரு அபார்ட்மென்ட் இருந்துள்ளது. அவருக்கு காதலியும் உண்டு.

இந்நிலையில் ஜெர்மனி போலீசார் மான்டபாரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் இருந்த லுபிட்ஸின் பொருட்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் சோதனையின்போது முக்கியமான துப்பு கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அது என்னவென்று தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த லுபிட்ஸுக்கு தீவிரவாதிகளுடன் சம்பந்தம் எதுவும் இல்லை என்று தெரிய வந்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications