எல்லாரும் சொல்லுங்க.. "ஓம் தரே ட்டுரு சோஹா".. கொரோனா வைரஸ் அப்படியே ஓடீரும் பாருங்க.. சொல்றாரு லாமா!
வைரஸ் பரவுவதை தடுக்க தலாய்லாமா மந்திரம் உச்சரிக்க சொல்லி உள்ளார்
பெய்ஜிங்: "ஓம் தரே ட்டுரு சோஹா" இந்த மந்திரத்தை எல்லாரும் சொல்லுங்க.. இதை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம் என்று திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா தெரிவித்துள்ளார்... இந்த மந்திரம்தான் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கொரோனோ வைரஸ் ஆரம்பமானது என்னவோ சீனாவில்தான்.. அதுகூட ஒரே ஒரு மாகாணமான வுவான் நகரத்தில்தான்.. ஆனால், இன்று அடுத்தடுத்த நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.
இதனால் உலக மக்கள் என்ன செய்வது, எங்கே ஓடுவது என்று தெரியாமல் விழித்து மிரண்டு வருகிறார்கள்.. அதனால் இந்த வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.

சூப் சாப்பாடு
வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவியது என்கிறார்கள்.. கட்டுவிரியன் பாம்புகளை சூப் வைத்தும், சாப்பாட்டில் சேர்த்தும் சீன மக்கள் சாப்பிட்டதால் இந்த வைரஸ் பரவியது என்று அடுத்தக்கட்டமாக சொன்னார்கள். இப்போது, இந்த வைரசுக்கு சீனாவில் இதுவரை 106 பேர் உயிழந்துள்ளனர்... மேலும், 4515 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரஸ்
இதை சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தெரிவித்துள்ளது. இந்நிலையில்தான், சீனாவில் உள்ள புத்தமதத்தை பின்பற்றும் சிலர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஏதாவது அறிவுரை சொல்லும்படி, தலாய்லாமாவுக்கு வேண்டுகோள் விடுத்தனர். ஹிமாச்சல பிரதேசம் மாநிலம் தரம்சாலாவில், திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமா உள்ளார்.

மந்திரம்
அவருக்குதான் புத்த மதத்தினர் ஃபேஸ்புக் மூலம் இந்த அட்வைஸ் கேட்டிருந்தனர். இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்கள் "ஓம் தரே டுட்டாரி ட்டுரு சோஹா" என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்தால் மன அமைதி, கவலையில் இருந்து விடுபடலாம்... இந்த மந்திரத்தை உச்சரித்தால் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தி நன்மையை அளிக்கும்..." என்று தலாய் லாமா தெரிவித்திருக்கிறார்.

நன்றி
இதுதான் வைரலாகி வருகிறது. அது மட்டுமல்ல... அவர் இந்த மந்திரத்தை உச்சரிப்பது போன்ற வீடியோவும் சோஷியல் மீடியாவில் வேகவேகமாக பரவி வருகிறது. பிரார்த்தனை செய்தால் குணமாகலாம் என்று பொதுவாக சொல்லி இருக்கலாம்.. அதைவிட்டு, இப்படி மந்திரத்தை உச்சரிக்க வேண்டுமா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். புத்தமதத்தினர், இதற்கு வரவேற்பும் தெரிவித்து நன்றி சொல்லி வருகின்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications