நிலநடுக்கத்தால் தரைமட்டமான புகழ்பெற்ற “தர்பார் ஸ்கொயர்” -அமிதாப்பின் 'மகான்' பட சூட்டிங் நடந்த இடம்

Subscribe to Oneindia Tamil

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் பதானில் உள்ள பழமை வாய்ந்த தர்பார் ஸ்கொயர் கட்டிடம் இடிந்து தரைமட்டமானது.

இன்று காலை நேபாளத்தில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலானன நிலநடுக்கத்தில் பல புராதன கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. அதில் ஒன்றுதான் "தர்பார் ஸ்கொயர்". யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற கட்டிடங்களில் ஒன்று இந்த "தர்பார் ஸ்கொயர்".

பல ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால், கடுமையான நிலநடுக்கத்தினை தாங்க இயலாமல் தரைமட்டமாகியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தர்பார் ஸ்கொயரானது அதனுடைய கட்டிட அமைப்பிற்கும், அழகுக்கும் பெயர் போனது. '

இந்த இடத்தில்தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தன்னுடைய "மகான்" (வெளியான ஆண்டு 1983) படத்திற்கான "பியார் மெ தில் பி மார் தே கோலி" என்ற பாட்டில் ஜீனத் அமனுடன் இணைந்து டூயட் பாடியிருந்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் எழுதியுள்ள அமிதாப், "ஓ கடவுளே நேபாளத்தில் நிலநடுக்கம்... இங்குதான் நான் மகான் படத்திற்கான பாடலில் நடித்திருந்தேன்... அம்மக்களுக்காக நான் கடவுளை வேண்டிக் கொள்கின்றேன்" என்று தெரிவித்திருக்கின்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+