உடல் முழுவதும் டாட்டூ… சட்டை போடாத படம் வெளியிட்ட டேவிட் பெக்காம்
லண்டன்: பிரிட்டன் கால்பந்து விளையாட்டு வீரரான டேவிட் பெக்காம் தனது 40வது பிறந்தநாளை சனிக்கிழமையன்று கொண்டாடினார். பச்சை குத்திக் கொள்வதில் அலாதி பிரியம் கொண்ட இவர் இன்ஸ்டாகிராமில் தனது சட்டை போடாத கவர்ச்சிகரமான படத்தை வெளியிட்டுள்ளார்.
டேவிட் பெக்காம் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடத் தொடங்கிய காலத்தில் இருந்து அவரது வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளின் போதும், பெக்காம் தனது உடலில் டாட்டூக்களை குத்திக் கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதுவரை 30 முறை டாட்டூக்களை குத்தியுள்ள அவரது உடல் முழுக்க பல இடங்களில் விதம் விதமான டாட்டூக்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த 1975ஆம் ஆண்டு பிறந்த டேவிட் பெக்காமுக்கு இன்று 40வது பிறந்த நாள். மான்செஸ்டர் யுனைடெட், ரியல்மாட்ரிட், ஏ.சி.மிலன் என உலகின் முன்னணி கால்பந்து அணிகளுக்காக பெக்காம் விளையாடியுள்ளார்.
மகள் பிறந்தபோது
1999ஆம் ஆண்டு பெக்காமுக்கு முதல்மகன் புருக்லீன் பிறந்தார். அதன் நினைவாக முதுகுப்புறத்தில் புருக்லீன் என டாட்டூ வரைந்தார்.
இரண்டாவது மகனுக்கு
2002ஆம் ஆண்டு இளைமகன் ரோமியோ பிறந்தார். இதனைத் தொடர்ந்து கழுத்துக்கு சற்று கீழே முதுகுபுறத்தில் ரோமியோ என அவர் டாட்டூ குத்திக் கொண்டார்.
7 உருவங்கள்
இதே ஆண்டில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்காக அவர் அணிந்து விளையாடிய ஜெர்சி என் 7-ஐ குறிக்கும் வலது கையில் 7 உருவப்படங்களை டாட்டூ குத்தினார் பெக்காம்.
பறக்கும் சிலுவை
2003ஆம் ஆண்டு டேவிட் பெக்காம் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து விலகி, ஸ்பெயினின் ரியல்மாட்ரிட் அணியில் இணைந்தார். அதனை நினைவு கூறும் வகையில் பறக்கும் சிலுவையை வரைந்தார்.
இந்தியில் மனைவி பெயர்
2003ஆம் ஆண்டு தனது மனைவி முன்னாள் ' ஸ்பைஸ் கேர்ள்' விக்டோரியாவின் பெயரை இடது கையில் அதுவும் ஹிந்தி மொழியில் வரைந்தார் பெக்காம். இந்தியாவையும், இந்து மதத்தின் பெருமையை விளக்கும் வகையிலும் தனது மனைவியின் பெயரை ஹிந்தி மொழியில் டாட்டூவாக வரைந்தார்.
மகன் - மகள் பெயர்
2005 ஆம் ஆண்டு பெக்காமுக்கு மூன்றாவதாக ஒரு மகன் பிறந்தார். அந்த குழந்தைக்கு க்ரஸ் என்று பெயரிட்ட பெக்காம் அந்த பெயரையும் முதுகுபுறத்தில் டாட்டூ குத்தினார். தொடர்ந்து கடைசி மகள் ஹர்பெரின் பெயரை பெக்காம் தனது கழுத்துப் பகுதியில் பச்சை குத்தினார்.
10 ஆண்டு திருமண விழா
கடந்த 2009ஆம் ஆண்டு டேவிட் பெக்காம்- விக்டோரியா திருமணம் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தனது இடது கையில் 10 ரோஜா மலர்களை கையில் டாட்டூ குத்திக் கொண்டார்.
ஜீசஸ் உருவம்
கிறிஸ்து இயேசு மீது மிகுந்த பக்தி கொண்ட பெக்காம் 2010ஆம் ஆண்டு ஜீசஸ் உருவப்படத்தை, தனது வயிற்றுப் பகுதியில் டாட்டுவாக வரைந்தார்.
லவ் பச்சை
2011ஆம் ஆண்டு தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில் தனது மணிக்கட்டு பகுதியில் 'லவ்' என்று பெக்காம் பதிவு செய்தார்.
கவர்ச்சிகரமான படம்
இத்தனை டாட்டுக்களை உடல் முழுவதும் குத்திக்கொண்டுள்ள டேவிட் பெக்காம், தனது சட்டை போடாத படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த படம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications