தாவூத்தின் கராச்சி வீட்டை கண்டுபிடித்த டிவி சேனல்: பாகிஸ்தானின் குட்டு உடைந்தது

Subscribe to Oneindia Tamil

கராச்சி: தொலைக்காட்சி சேனல் ஒன்று நடத்திய ரகசிய ஸ்டிங் ஆபரேஷனில் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சியில் வசிப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானின் 23 ஆண்டு கால பொய் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

257 பேர் பலியான மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் வசித்து வருகிறார். ஆனால் இதை பாகிஸ்தான் அரசு 23 ஆண்டுகளாக மறுத்து வருகிறது.

Dawood Ibrahim's Karachi house captured on TV sting

தாவூத் இப்ராஹிம் கராச்சி நகரில் டி13, பிளாக் 4, கிளிப்டனில் வசிப்பதாக இந்தியா பாகிஸ்தான் அரசிடம் பல முறை தெரிவித்தது. அதற்கான ஆதாரங்களை அளித்தும் பாகிஸ்தான் அதை ஏற்கவில்லை.

இந்நிலையில் பிரபல செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்று நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் நடத்தி தாவூத் இந்தியா கூறியபடி கராச்சியில் டி13, பிளாக் 4, கிளிப்டனில் வசிப்பதை கண்டுபிடித்துள்ளது.

தாவூத் அங்கு வசிப்பது அப்பகுதி மக்கள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் தெரிந்துள்ளது. கிளிப்டன் பகுதிக்கு சென்று தாவூத் இப்ராஹிம் வீடு எது என்றால் அனைவரும் அடையாளம் காட்டுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+