பாகிஸ்தானில் பயங்கரம்.. பள்ளி வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்.. 4 குழந்தைகள் உயிரிழப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தனி நாடு கேட்டு போராடி வரும் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஸ்தர் மாவட்டத்தில் பள்ளி வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில், 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ பள்ளி வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவ கண்டோன்மெண்டில் உள்ள பள்ளிக்கு குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பள்ளி குழந்தைகள் 4 பேர் பலியாகினர். பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயணம் செய்ததாகவும் இவர்களில் பலர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காரில் வெடிகுண்டுகளை நிரப்பிக்கொண்டு பள்ளி வாகனத்தில் மோத செய்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில் பள்ளி வாகனம் பலத்த சேதம் அடைந்து மாணவர்கள் 38 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலுசிஸ்தான் என்பது பாகிஸ்தானில் உள்ள மிகப்பெரிய மாகாணம் ஆகும். ஆனால் மக்கள் தொகை இந்த மாகாணத்தில் மிக குறைந்த அளவே உள்ளது.
ரான் ஆப்கானிஸ்தான் உடன் எல்லைகளைப் பகிர்ந்துள்ள பலுசிஸ்தான் மக்கள் தங்களை ஒருபோதும் பாகிஸ்தானியர்களாகக் கருதுவது இல்லை. தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்பதை வலியுறுத்தியே அங்கு தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.. ராணுவம் மற்றும் போலீஸை பயன்படுத்தி அவர்களைப் பாகிஸ்தான் அரசு கட்டுப்படுத்தி வருகிறது.
அதேநேரம் பலுசிஸ்தான் புரட்சியாளர்கள் பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் கேட்டு ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். இதனால், அவ்வப்போது அங்கு தாக்குதல்களும் நடைபெறுகின்றன. இத்தகைய சூழலில் தான் அங்கு பள்ளி மாணவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை முன்னெடுத்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து உள்ளூர் பிரிவினைவாதகுழு அடிக்கடி தாக்குதல் நடத்துகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications