அதிகாலை கேட்ட அலறல்.. காசா முகாம் மீது குண்டு போட்ட இஸ்ரேல்.. 40 அப்பாவி பொதுமக்கள் உடல் கருகி பலி
காசா: இஸ்ரேல் காசா இடையே போர் தொடரும் நிலையில், தெற்கு காசாவில் புலம் பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த கூடார முகாம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60 பேர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது என்னவோ காசா பகுதியில் வசிக்கும் மக்கள் தான்.

தாக்குதல்: காசா மீது இடைவிடாமல் நடத்தப்படும் தாக்குதல்களால் அங்கு வாழும் பாலஸ்தீன மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே காசாவின் கான் யூனிஸ் அடுத்துள்ள அல்-மவாசி பகுதியில் அமைந்துள்ள கூடாரங்களைக் குறிவைத்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக காசாவின் சிவில் டிஃபென்ஸ் தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் ஒவ்வொரு நகரத்தின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அங்கு மக்கள் அதிகம் வாழும் கான் யூனிஸ் மற்றும் அருகிலுள்ள ரஃபாவில் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த நிலையில், இஸ்ரேல் ராணுவம் கடலோரப் பகுதியைப் பாதுகாப்பான பகுதியாக அறிவித்து இருந்தது. அதாவது அந்த பகுதியில் தாக்குதல் நடத்த மாட்டோம் என அறிவித்து இருந்தது. இதன் காரணமாகவே இந்த அல்-மவாசி பகுதியில் பாலஸ்தீன மக்கள் அதிகம் முகாமிடத் தொடங்கினர்.
மிக மோசம்: இந்தச் சூழலில் தான் அங்கும் தாக்குதல் நடந்துள்ளது. இன்று காலை இஸ்ரேல் உளவு திடீரென தலைக்கு மேல் பறந்ததாகத் தெரிவிக்கும் பாலஸ்தீன மக்கள், திடீரென இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறுகிறார்கள். தாக்குதலைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் இப்போது துரிதமாக நடந்து வருகிறது. முகாமில் சில இடங்களில் சுமார் 9 மீட்டர் அதாவது 30 அடி வரை கூட பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாகக் காசா அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 60 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மக்கள் தங்கி இருந்த முகாம் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள காசா நிர்வாக அதிகாரிகள், இந்த போரின் மிகக் கொடூரமான படுகொலைகளில் ஒன்று என்று இதைக் குறிப்பிட்டுள்ளனர். கூடாரங்கள் முழுமையாகப் பற்றி எரிந்த நிலையில், உடல்களை மீட்பதிலேயே சிரமம் நிலவுவதாக அதிகாரிகள் கூறினர்.
இஸ்ரேல் விளக்கம்: அதேநேரம் இஸ்ரேல் தரப்பு இதற்கு வேறு விதமான விளக்கத்தைக் கொடுத்துள்ளது. அதாவது கான் யூனிஸில் தாக்குதலுக்கு அப்பாற்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் செயல்பட்டதாகவும் அவர்களைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர். பாதுகாப்பு மண்டலத்தில் இருந்த இந்த பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழப்பதைத் தடுக்க இஸ்ரேல் தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு முகாம்களில் சரியாக எங்கே பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து தேவையான வெடி மருந்தைப் பயன்படுத்தியதாகவும் வான்வழி கண்காணிப்பு பணிகளும் மேற்கொண்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
ஹமாஸ் மறுப்பு: அதேநேரம் இஸ்ரேலின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துள்ள ஹமாஸ், தங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்த பாதுகாப்பு மண்டலத்தில் தங்கவில்லை என்று கூறியுள்ளது. அப்பாவி மக்களைக் கொன்றுவிட்டு இஸ்ரேல் அதைச் சமாளிக்கவே இந்த காரணங்களைக் கூறுவதாகவும் ஹமாஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. மக்கள் இருக்கும் பகுதிகளில் இருக்க மாட்டோம் என்று பல முறை கூறிய பிறகும், திட்டமிட்டு இஸ்ரேல் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி மக்களைக் கொன்று வருகிறது என்று ஹமாஸ் தரப்பு கூறியுள்ளது.
இது தொடர்பாக காசாவின் சிவில் பாதுகாப்பு பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "ஆரம்ப மதிப்பீடுகளை வைத்துப் பார்க்கும் போது குறிப்பிடத்தக்க அழிவு இங்கு ஏற்பட்டுள்ளது தெரிகிறது. பாதுகாப்பு மண்டலங்களில் மக்கள் பத்திரமாக இருக்கலாம் என்பதையே கேள்விக்குறியாக்குவதாக இந்தத் தாக்குதல் இருக்கிறது" என்றார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications