மூக்கில் இருந்து கொட்டும் ரத்தம்! ஈராக்கில் தீயாக பரவும் விசித்திர காய்ச்சல்.. இந்தியாவிற்கு ஆபத்தா
ஈராக்: உலகெங்கும் பல்வேறு வைரஸ் பரவும் நிலையில், ஈராக் நாட்டில் இப்போது புதுவித வைரஸ் பாதிப்பு பரவ தொடங்கி உள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாகவே உலக நாடுகள் கொரோனா வைரசில் இருந்து தப்பிக்கவே பெரும் போராட்டம் நடத்தின. வேக்சின் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே, இந்த வைரஸ் பாதிப்பு சற்று குறைந்து உள்ளது.
இதனிடையே இப்போது புதிய புதிய நோய்ப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே கண்டறியப்படும் குரங்கு அம்மை இப்போது 10க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

மூக்கில் வடியும் ரத்தம்
இந்தச் சூழலில் மனிதக் குலத்திற்கு அடுத்த தலைவலியாக ஈராக் நாட்டில் புதியதொரு வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு மூக்கில் இருந்து ரத்தம் வடிகிறது. இப்படி ரத்தம் வடிவது தொடரும் நிலையில், ஒரு கட்டத்தில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இது இந்த நோய்ப் பாதிப்பை மிகவும் மோசமானதாக மாற்றுகிறது. ஈராக் நாட்டில் இப்போது இந்த வகை நோய்ப் பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது.

கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல்
இந்த நோய்ப் பாதிப்பை கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் ( Crimean-Congo haemorrhagic fever) என்று அழைக்கின்றன. இப்போது ஈராக் நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் தான் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவல் ஏற்பட்ட போது சுகாதார பணியாளர்கள் எப்படி பிபிஇ கிட் போட்டுக் கொண்டு இருந்தார்களோ, அதேபோன்ற காட்சிகள் இப்போது ஈராக் கிராமப் புறங்களில் காணப்படுகிறது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

அதிகரிக்கலாம்
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 111 பேருக்கு இந்த கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 19 பேர் இந்த நோய்ப் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். வரும் காலங்களில் இந்த பாதிப்பு அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர். இப்போது தெற்கு ஈராக்கில் விவசாயத்தை முதன்மை தொழிலாகக் கொண்டுள்ள ஏழ்மையான ஒரு பிராந்தியத்தில் தான் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்த ஆண்டு அதிகம்
கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே இந்த வைரஸ் பாதிப்பு இருக்கும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு பாதிப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இப்போது ஈராக் கிராமப்புறங்களில் தான் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் நகரப்புறங்களில் பரவ தொடங்கினால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

முதலில் எங்கே
இந்த நோய் முதன்முதலில் 1944 இல் கிரிமியாவில் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து 1969இல் காங்கோ நாட்டில் அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இந்த வைரஸ் கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என்ற பெயரைப் பெற்றது. இது ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளில் எண்டமிக்காக உள்ளது. இருப்பினும், இப்போது இதை ஈராக்கில் வேகமாகப் பரவு தொடங்கி உள்ளது.

வேக்சின் உள்ளதா
இந்த பாதிப்பிற்கு இதுவரை தடுப்பூசிகள் எதுவும் இல்லை. இது பரவ தொடங்கியதும் பாதிப்பு வேகமாக ஏற்படும். இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட உடன் மூக்கில் இருந்து கடும் ரத்தக் கசிவு ஏற்படும். வெளிப்புறம் மட்டுமின்றி (internal bleeding) எனப்படும் உட்புற ரத்தக் கசிவும் ஏற்படும். அனைத்தையும் விட ஆபத்தானது என்னவென்றால், இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் 5 பேரில் இருவர் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. வேக்சினும் இல்லாத நிலையில், இது உலகெங்கும் பரவினால் அது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

எப்படிப் பரவும்
ஆடுகளும், மாடுகளும் ஒரு வித உண்ணி தாக்குதலுக்கு ஆளாகும் போது, அந்த உண்ணி மூலமும் இந்த வைரஸ் பரவும். அதேபோல உண்ணியால் பாதிக்கப்படும் விலங்குகளை இறைச்சிக்காக ஆடுகள் வெட்டப்படும் போதும், இந்த வைரஸ் பரவல் ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம், அல்லது பிற உடல் திரவங்களுடன் ஒருவருக்குத் தொடர்பு ஏற்படும் போது அதன் மூலம் இந்த வைரஸ் பாதிப்பு மற்றவர்களுக்குப் பரவும் ஆபத்து ஏற்படலாம். இந்த வைரஸ் பரவ தொடங்கி உள்ள நிலையில், ஈராக்கில் இறைச்சி பயன்பாடு பெருமளவு குறைந்துள்ளது.

இந்தியாவில்
இந்த வைரஸ் புதிய வகை வைரஸ் இல்லை. ஏற்கனவே கடந்த காலங்களில் இந்த வைரஸ் பரவி உள்ளது. இப்போது பரவும் வேகம் மட்டுமே திடீரென அதிகரித்துள்ளது. கடந்த காலங்களில் ஓரிரு இடங்களில் இந்தியாவில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக யாருக்கும் இந்த பாதிப்பு கண்டறியப்படவில்லை. இப்போது இந்த வைரஸ் இந்தியாவில் இல்லை என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications