கருகிய 46 உடல்கள்.. சிலியை ஆட்டிப்படைக்கும் காட்டுத் தீ! 158 இடங்களில் 7,000 ஹெக்டேர் பாதிப்பு
சாண்டியாகோ: தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் ஏற்பட்டு இருக்கும் காட்டித் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்து உள்ளது.
தென் அமெரிக்க நாடான சிலியின் மத்திய பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் திடீரென அதி பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டு உள்ளது. காட்டில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் சூழலில், இந்த தீ விபத்தால் அங்கு உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு மேல் தீ பற்றி எரிந்தது. காட்டுத் தீ தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது . சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவுவதை தடுக்கும் வகையில், விமானங்களின் உதவியுடன் நீர் கொண்டு வரப்பட்டு, வனத்தின் மேல் பகுதியில் இருந்து நீர் ஊற்றப்பட்டு தீ அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திடீரென ஏற்பட்ட இந்த பெரும் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் சரியான தகவல் கிடைக்கவில்லை. மீட்புப் பணிகளுக்கு மத்தியில் இது தொடர்பான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றின் வேகம் காரணமாக மரக்கிளைகளுக்கு இடையிலான உராய்வுகளே இந்த காட்டுத் தீ ஏற்படுவதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
தீ பரவும் வாய்ப்பு இருக்கும் இடங்களில் பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக 158 இடங்களில் ஏற்பட்ட இந்த காட்டுத்தீ காரணமாக 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான வனப் பகுதிகள் எரிந்து நாசமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் முதலில் 10 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியான நிலையில் தற்போது இந்த பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்து உள்ளது.
சிலி நாட்டிம் கடற்கரை நகரங்களை இந்த காட்டு தீயின் காரணமாக சாம்பல் புகை சூழ்ந்து உள்ளது. இந்த புகை அடர்ந்த மூடுபனி போல காணப்படுகிறது. குறிப்பாக மத்திய பகுதியான வினா டெல் மார் மற்றும் வால்பரைசோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை வெளியேறி உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications