தூக்கி வீசப்பட்ட மனிதர்கள்.. 373 பேரை காவு வாங்கிய ராய் புயல்.. துயரத்தில் பிலிப்பைன்ஸ்
ராய் புயல் காரணமாக 375 பேருக்கு மேல் பிலிப்பைன்ஸ் நாட்டில் இறந்துள்ளனர்
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய கடும்புயல் காரணமாக, 373 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.. ராய் புயல் காரணமாக, அந்நாட்டு மக்கள் சந்தித்த இழப்புகளை இப்போது வரை கணக்கெடுக்க முடியவில்லை.. உயிரிழப்புகளையும் கணக்கெடுக்க முடியவில்லை..தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்களை ராய் என்ற சக்தி வாய்ந்த புயல் புரட்டி போட்டுவிட்டது..
மணிக்கு 121 கிமீ முதல் 270 கிமீ வரை சூறாவளி காற்று சுழன்று சுழன்று அடித்ததில், பிலிப்பைன்ஸ் நாடே திணறிவிட்டது. இதற்கு முன்பு இப்படி ஒரு சக்திவாய்ந்த புயல் பிலிப்பைன்ஸை தாக்கியதில்லை..

2 நாட்கள் சூறாவளி
2 நாட்களாகவே புயல் வீசி கொண்டே இருந்ததில், நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன, போஸ்ட் கம்பங்கள் சரிந்தன, மீன்பிடி படகுகள் தூக்கி வீசப்பட்டன.. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன.. கால்நடைகள் உயிருடன் அடித்து செல்லப்பட்டன... வாகனங்கள் நீரில் மிதந்தன.. லட்சக்கணக்கில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் நாசமாயின...

தொடர்பு சேவை
புயல் காரணமாக அங்கு மின்வினியோகம் 3வது நாளாக தடைபட்டு உள்ளது... தகவல் தொடர்பு சேவையும் முற்றிலும் முடங்கி போய்விட்டது.. சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தீவுகளை 'சூப்பர் டைஃபூன்' என்று வகைப்படுத்தப்பட்டுள்ள 'ராய்' சூறாவளி தாக்கியபோது மணிக்கு சுமார் 195 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

காணவில்லை
இதில், குறைந்தது 375 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது என்று அந்நாட்டு காவல்துறை தெரிவிக்கிறது.. 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.. நூற்றுக்கணக்கானோரை காணவில்லை என்று உள்ளூர் போலீசார் கூறுகிறார்கள்... இந்த சூறாவளியால் உண்டான இழப்பு எவ்வளவு என்பதை கணக்கிடுவது மிகவும் கடினமானதாக உள்ளது.. மிகவும் பரவலான இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் இன்னும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது..

மீட்பு பணி
4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.. ஏராளமானோரை காணவில்லை.. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. பல்வேறு மாகாணங்களில் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு உள்ளதால், இறப்பு எண்ணிக்கை முழுமையாக வந்து சேரவில்லை... பிலிப்பைன்ஸில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது..












Click it and Unblock the Notifications