தெற்கு சூடானில் வெடித்து சிதறிய எண்ணெய் லாரி... உடல் கருகி பலியானோர் எண்ணிக்கை 183 ஆக உயர்வு
மரிடி : தெற்கு சூடானில் விபத்துக்குள்ளான எண்ணெய் லாரி வெடித்துச் சிதறியதில் பலியானோர் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கு ஈக்குவட்டோரியா பகுதியில் அமைந்துள்ள மரிடி என்ற இடத்தில் நேற்று முன்தினம் கச்சா எண்ணெய் ஏற்றி சென்ற லாரி விபத்துக்குள்ளாகி, எண்ணெய் கொட்ட தொடங்கியது.

அதை பிடித்து செல்வதற்காக ஏராளமான மக்கள் திரண்டனர். அப்போது அந்த லாரி, எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இதனால் மக்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த கோர விபத்தில் தீக்காயம் அடைந்தும் உடல் கருகியும் 100 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை நேற்று 183 ஆக உயர்ந்துள்ளது.
அதுபற்றிய தகவலை வெளியிட்ட மரிடி கவுண்டி கமிஷனர் வில்சன் தாமஸ் யாங்கா, மோசமான நிலையில் உள்ளவர்களுக்கு மேல்சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படுவதாக தெரிவித்தார்.
எனினும் பலர் தீக்காயங்களுடன் தவித்து வருவதால், பலி எண்ணிக்கை 200 ஐத் தாண்டும் என்று அஞ்சப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications