ஆப்கான் தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு.. பள்ளி மாணவிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பெண்கள் பள்ளிக்கு அருகே நடந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கே சயீத்-உல்-சுஹாதா பெண்கள் பள்ளி உள்ளது. நேற்று மாலை இந்தப் பள்ளியில் இருந்து பெண்கள் வழக்கம்போல தங்கள் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென பள்ளியின் பார்கிங் பகுதியில் இருந்த காரில் இருந்து சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு குண்டுகள் அங்கு வெடித்தன. இதில் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50ஐ தாண்டியுள்ளது. மேலும், இதில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களும், காயமடைந்தவர்களுக்கும் பெரும்பாலும் 11-20 வயதுடைய பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் என்பது மற்றொரு அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும்.
பள்ளியில் நடைபெற்றுள்ள இந்தக் குண்டுவெடிப்பிற்கு தற்போதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேபோல இந்த குண்டுவெடிப்பிற்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என தலிபான்களும் விளக்கமளித்துள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் ஷியா ஹாசராஸ் பிரிவினரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளதாகச் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். இஸ்லாமியப் பண்டிகையான ரம்ஜானுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த குண்டுவெடிப்பு அந்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications