டிரம்ப்: அதிபர் பதவியில் இருந்து துரத்தியடிக்கப்படுவாரா? அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடக்கும் பரபர வாக்கெடுப்பு
அமெரிக்காவில் டெமாக்ரடிக் கட்சியினர் மீண்டும் ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஈரான் போர் தொடர்பான அதிகாரத்தை கட்டுப்படுத்தும் தீர்மானத்துக்கு செனட்டில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று டெமாக்ரடிக் கட்சியினர் வலியுறுத்துகின்றனர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சிறுபான்மைத் தலைவராக இருக்கும் செனேட்டர் சக் ஷூமர், ஈரானில் நடைபெறும் போரை நிறுத்தி, கட்டுப்பாட்டை இழந்த டிரம்பை கட்டுப்படுத்த வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளார். இது அமெரிக்க செனட்டில் 4-வது முறையாக நடைபெறும் முயற்சி இது.

ஈரான் போருக்கு எதிராக அமெரிக்க மக்கள் மத்தியில் அதிகப்படியான கருத்துக்கள் எதிரொலிக்க துவங்கியுள்ள நிலையில் டெமாக்ரடிக் கட்சியினரின் இந்த புதிய முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது தெரியவில்லை. ஆயினும் டெமாக்ரடிக் கட்சியினர் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில், இப்புதிய நடவடிக்கை, அமெரிக்க அரசியலில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷூமரின் எச்சரிக்கை
Chuck Schumer தனது எக்ஸ் பதிவில், 4-வது முறையாக குடியரசுக் கட்சியினருக்கு இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் வாய்ப்பு கிடைக்கிறது என்று எழுதியுள்ளார். அவர் டிரம்பின் நடவடிக்கையை ஆபரேஷன் எபிக் ஃபியூரி என்று பெயரிடப்பட்டாலும், தற்போது ஆபரேஷன் எபிக் ஃபெயில் என்ற நிலையில் உள்ளது என கேலி செய்துள்ளார்.
இந்த போரில் இதுவரையில் நடந்தது என்னவென்று பார்த்தால், ஹார்முஸ் ஜலசந்தியில் முழுமையான குழப்பம், அமெரிக்காவில் பல ஆண்டுகளில் இல்லாத உயர்ந்த பெட்ரோல் விலை, ஈரான் அரசு இன்னும் நிலையாகவும், உறுதியாகவும் நிற்கிறது, ஈரானின் அணு ஆயுதத் திட்டம் எந்த மாற்றமும் இன்றி தொடர்வது, அமெரிக்காவின் உலகளாவிய நம்பகத்தன்மை குறைந்து வருவது ஆகியவை இந்த போர் நடவடிக்கையின் விளைவுகள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவின் இந்த நிலையை டிரம்ப் இன்னும் மோசமான நிலைக்கு கொண்டு செல்லும் முன்பு இந்தப் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?
அமெரிக்க அரசியல் சட்டப்படி, போரை அறிவிக்கும் அதிகாரம் காங்கிரஸுக்கே உண்டு. அதிபருக்கு அந்த அதிகாரம் இல்லை. ஆனால் டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார். டெமாக்ரடிக் கட்சியினர் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் பல முறை போர் அதிகாரம் தொடர்பான தீர்மானங்களை கொண்டு வந்துள்ளனர். ஆனால் குடியரசுக் கட்சியினர் இரு சபைகளிலும் பெரும்பான்மையுடன் இருப்பதால், இந்த தீர்மானங்களை தொடர்ந்து தடுத்து வருகின்றனர். இதனால் டெமாக்ரடிக் கட்சியினரின் முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை.
அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பு
சக் ஷூமர் மற்றும் டெமாக்ரடிக் கட்சியினர், டிரம்பின் ஈரான் தொடர்பான ராணுவ நடவடிக்கைகளுக்கு காங்கிரஸின் அனுமதி தேவை என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்த முயற்சி ஏற்கனவே பல மாதங்களாக தொடர்கிறது. குடியரசுக் கட்சியினர் இதை தடுத்து வருவதால், டெமாக்ரடிக் கட்சியினர் 4-வது முறையாக வாக்கெடுப்பை கோரியுள்ளனர்.
இந்த வாக்கெடுப்பு அமெரிக்க அரசியலில் பெரும் மோதலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டெமாக்ரடிக் கட்சியினர் வெற்றிப்பெற்றால் டிரம்ப்-ன் அதிபர் பதவிக்கும், டிரம்ப்-ன் அதிகாரத்திற்கும் பெரும் கேள்வியாக மாறக்கூடும்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications