ஐபோன் 6 கொடுப்பவருக்கு 2 அடுக்குமாடி வீடு: அமெரிக்காவில் அதிரடி விளம்பரம்
வியன்னா: ஐபோன் 6 கொடுத்தால் தனது 3 பெட்ரூம் வீட்டை தருவதாக ஆஸ்திரியாவில் வசிக்கும் அமெரிக்கர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் இருக்கும் இரண்டு அடுக்குமாடி வீடு விற்பனைக்கு வந்துள்ளது. 3 பெட்ரூம் உள்ள அந்த வீட்டின் உரிமையாளர் ஆஸ்திரியாவில் வசித்து வருகிறார். அவர் அந்த வீட்டை வந்து பார்த்ததே இல்லை. அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அந்த வீட்டை ரூ. 24 லட்சத்து 66 ஆயிரத்து 505க்கு வாங்கியுள்ளார்.

வீட்டை வாங்கிய விலையை விட அதிக விலைக்கு விற்றுவிடலாம் என்று அவர் நினைத்தார். ஆனால் மிஷிகன் மாநிலத்தில் பொருளாதார நிலைமை சரியில்லாததால் வீடுகளின் விலை சரிந்தது. அந்த வீடு கடந்த 2010ம் ஆண்டில் இருந்து யாரும் வசிக்காமல் பூட்டியே கிடக்கிறது. வீட்டை வாங்குபவர் 4 ஆண்டுகளாக செலுத்தப்படாமல் உள்ள ரூ. 3 லட்சத்து 94 ஆயிரத்து 551 வரியையும் செலுத்த வேண்டும்.
இந்நிலையில் அவர் வீட்டை விற்க தான் அணுகிய ஏஜெண்டிடம் கூறியிருப்பதாவது,
யாராவது ஐபோன் 6 அல்லது 32 ஜிபி ஐபேட் கொடுத்தால் அவர்களுக்கு என் வீட்டை கொடுக்க தயார் என்று தெரிவித்துள்ளார்.
ஐபோன் 6 வாங்கும் பணத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று வரலாம் என்று மக்கள் கூறி வரும் நிலையில் இந்த நபர் இப்படியொரு அதிரடி விளம்பரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications